• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-20 12:29:49    
தாமாகவே தொழில் நடத்தும் இளைஞர்கள்

cri

நிதி நெருக்கடியினால், பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் பலர், வேலை வாய்ப்பு பெறுவதிலான பெரும் நிர்பந்தத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இவர்களில் சிலர் தாமாகவே தொழில் நடத்தி நெருக்கடியின் போதும் வாய்ப்புகளைப் பெற்றனர்.

மலர் வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்ற Yang Miao, நுண்கலைத் துறையில் பட்டம் பெற்ற Pan Pan, மாடல் ஆன Li Dan, ஒப்பனைத் துறையில் பட்டம் பெற்ற Mei Zi ஆகிய 4 இளைஞர்கள், திருமண ஆடையை வடிவமைத்து, மண மகளை ஒப்பனை செய்யும் மையமொன்றை உருவாக்கினர். "தலைநகரில் அம்பர்" என்ற அவர்களின் அலுவலகம் பெய்ஜிங்கில் உள்ளது. அவ்வளவு பெரிதாக இல்லாத ஓர் அறையில், பல்வகை திருமண ஆடைகளும் காலணிகளும் ஒழுங்குபட வைப்பட்டுள்ளன. 4 இளைஞர்கள் தங்களது அறிவைப் பயன்படுத்தி, திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களின் வெவ்வேறான குணாதிசயத்துக்கு இணங்க, வேறுபட்ட திட்டத்தை வடிவமைக்கின்றனர்.

தொழில் நடத்தும் தொடக்கத்தில், தரமிக்கச் சேவை மற்றும் நல்ல எண்ணத்தின் மூலம், அவர்களது மையம் விரைவில் நல்ல வருமானத்தை ஈட்டியது. வெற்றி தந்த மகிழ்ச்சியையும் அவர்கள் அனுபவித்தனர். ஆனால் இந்த வெற்றி நீண்டகாலம் தொடரவில்லை. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டது. துணி நெருக்கடியும் வருகிறது. வினியோக வணிகர் திடீரென விலையை அதிகரித்தார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்ட முன்பதிவுப் படிவங்களின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. இக்குழுவில் ஒரேயொரு ஆடவரான Yang Miao விலகிக் கொண்டார். எஞ்சிய பெண்கள் மூவரும் முயற்சியுடன் மையத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், புதிய வேலையில் ஈடுபட்ட Yang Miao ஒவ்வொரு நாளும் வேலைக்குப் பின் தாங்கள் நிறுவிய மையத்துக்கு வந்து பார்க்கிறார். அவ்வப்போது அவர் தாம் சம்பாதித்த பணத்தை மூன்று மங்கையருக்கும் வழங்குகிறார்.

ஒருவருக்கொருவர் உதவி மற்றும் ஆதரவு அளிப்பதன் மூலம் நெருக்கடியைச் சமாளித்த அவர்கள், புதிய வாய்ப்பைத் தேடியெடுத்தனர். நெருக்கடி நிலைமையில் பணத்தைச் சிக்கனப்படுத்த, மேலதிக இளைஞர்கள் "தலைநகரில் அம்பர்" போன்ற சிறிய மையத்துக்கு வந்து திருமண ஆடைகளை முன்பதிவு செய்ய விரும்புகின்றனர் என்று Pan Pan கூறினார். அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் நிலையில் உள்ளனர்.

1 2