
அரசியலிலும், ராணுவ உத்திகளை தீட்டுவதிலுமான பேரளவு பங்களிப்பு நல்கியவர்களை வழங்கிய இந்த தேர்வுமுறை சீன வரலாற்றில் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறுக்கவியலாது.
தெனாலிராமனும், பீர்பாலும் அந்தக் காலத்தில் தங்களது அரசருக்கு நெருக்கமானவர்களாகவும், அமைச்சர்களை போல் ஆலோசனைகள் வழங்கியவர்களாகவும் இருந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். அந்த காலத்தில் அவர்கள் படித்து பயிற்சியெல்லாம் எடுத்து, அரசாங்க வேலைக்காக ஐ. ஏ. எஸ் தேர்வெல்லாம் எழுதினார்களா என்ன?
இன்றைக்குத்தான் எழுத்துத் தேர்வு, நேர்முகம், உடல் தகுதிச் சோதனை என அரசாங்க வேலை பெறுவதற்காக நம்மில் பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறோம். அதிலும் அரசு அதிகாரிகளுக்கான தேர்வென்றால், அயராது உழைத்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அடிப்படை நுழைவுத்தேர்வு ஏதுமற்ற அரசுப்பணிகள் இருக்கின்றன, இல்லையென்று நாம் மறுக்கவில்லை. ஆனால், காவல்துறையோ, நிர்வாகமோ,தூதாண்மைத் துறையோ அதிகாரிகள் நிலையிலான அரசுப்பணி என்றால், நிச்சயம் நுழைவுத்தேர்வு அல்லது தகுதி தேர்வுகள் இருக்கும்.
இன்றைக்குத்தான் இப்படி தேர்வெழுதவேண்டும், நேர்முகத்தில் மதிநுட்பமும், மிடுக்கும் மிளிர பதிலளிக்கவேண்டும் அதற்கு பின் வேலை கிடைக்குமா என்று மண்டையை பிய்த்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். ஆனால் அந்தக்காலத்தில் அரசாங்க வேலை பெற இப்படித்தான் தேர்வெல்லாம் எழுதினார்களா??? யாருக்கு தெரியும், ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்.
1 2 3
|