
மன்னாராட்சிக் காலத்தில் அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும் இன்றைக்குள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வும், ஐந்தாம் படையில் பணிபுரிய தனிச்சிறப்பான தேர்வும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தாலும் வியப்பில்லை.
கல்வி, செல்வம், வீரம் என அன்றைய சமூகத்தில் மூன்று விதமான தகுதிகளின் அடிப்படையில் வேலையோ, தொழிலோ செய்திருக்க வேண்டும் என்பது நமது கருத்து. அந்த வகையில் கல்வியும், வீரமும் அரச நிர்வாகத்தின் மூளையாகவும், கைகளாகவும் செயல்பட்டிருக்க வேண்டும். இந்தியாவை போலவே சீனாவும் கூட, ஏன் உலகமே பல நூற்றாண்டுகளுக்கு முன் சிறிய சிறிய நாடுகளாக, குறுநிலப்பிரதேசங்களாக இருந்தன. மன்னராட்சியின் கீழ், நாடுகளுக்கிடையே போரும், போரில் வென்றால் அந்த மன்னனின் ஆளுகைக்கீழ் இந்த நாடு, அதன் பின் அவனது ஆட்சி எல்லை விரிவாக, அவனது அரசாட்சியும் மாட்சி பெற்று, அரசன் பேரரசனாக மாறினான். இதெல்லாம் வரலாறு, மானுடவியல் கூறும் உண்மைகள்.
சரி மன்னராட்சி காலத்தில் அரசாங்கத்தில் அதிகாரிகளாக இருந்தவர்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்பட்டனர்? அந்த காலத்தில் அதிகாரிகளுக்கு ஏதாவது தேர்வெல்லாம் நடந்ததா? 1 2 3
|