• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-26 09:43:53    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் தோழர்களே ! உங்களுடைய கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் தொகுத்து உங்களது கருத்துகளை சிற்றலையில் கேட்கும்விதமாக அறிவிக்கும் நிகழ்ச்சி தான் இது .
கலை சிற்றலையில் ஒலிபரப்பப்பட, சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்கும் நீங்கள் அவை பற்றிய கருத்துக்களை கடிதம் மற்றும் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு தெரிவியுங்கள்
தமிழன்பன் வானொலி நிகழ்ச்சிகளின் கருத்துக்கள், அந்நிகழ்ச்சி வழங்கப்பட்டவிதம், மேலும் சிறப்பாக வழங்கப்பட ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகள், வளர்ச்சிகான வழிமுறைகள் அனைத்தும் உங்கள் பதில்களில் இடம்பெற செய்யுங்கள்.
கலை தொடர்ந்து கடிதம் எழுதிவருபவர்கள் நிகழ்ச்சிகளை கேட்கும் உங்கள் நண்பர்களிடமும், உறவினரிடமும் கருத்து கடிதங்கள் எழுதவும் மின்னஞ்சல் அனுப்பவும் தூண்டுங்கள்.


தமிழன்பன் சரி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோம்..
கலை இன்றைய நிகழ்ச்சியின் முதலாவதாக ஈரோடு சத்தியமங்கலம் எம். சுந்தர வடிவேலு செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வறட்சி வெற்றிகரமான கையாளப்பட்டு அதனால் ஏற்பட்சிருந்த பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியை போக்குவதற்கான முயற்சியில் சீனாவின் அறிவியல் தொழில்நுட்பம் மிகவும் பயன்பட்டிருப்பதை செய்திகள் வழியாக அறிந்தேன். அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வறட்சியின் பாதிப்புகளை குறைத்து மக்களை காப்பாற்றியுள்ளது பாராட்டுக்குரியது.
தமிழன்பன் பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் சீன தலைமையமைச்சரின் ஐரோப்பிய பயணம் பற்றி அனுப்பிய கடிதம். சீன ஐரோப்பிய ஒன்றிய பிரச்சனைகள், இந்த இருதரப்பபு உறவின் முக்கியத்துவம், உலக பொருளாதார வளர்ச்சிப்போக்கில் இருதரப்பின் பங்களிப்பு ஆகியவற்றை இதில் அறிய முடிந்தது. சீனாவின் உறவு எத்தகைய முக்கியத்துவத்தை அளிக்கும் என்பதையும் அந்த கட்டுரை தெளிவுபடுத்தியது.
கலை மணக்கால் இரா. அன்பழகன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி செந்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி வளரும் இளம் நேயர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பொதுவாக ஒருவரின் வெற்றியை பார்த்து, அவரது பெயரை கெடுக்க நினைத்தால் அது பொறாமை. அவரைப்போல நாமும் வளர வேண்டும் என்று நினைத்தால் அது போட்டி. இப்படித்தான் செந்தில் அவர்களின் பேட்டி அமைந்தது. மேலும் அவரின் கடின உழைப்பிற்கும் தீவிர முயற்சிகளுக்கும் கிடைத்த சீனப்பயண அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டவிதம் மிகவும் அருமை.


தமிழன்பன் கோவில்பட்டி கோ. கிருஷ்ணமூர்த்தி அனுப்பிய கடிதம். அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிவதால், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் இரவு சேவையை கேட்டுவருகிறேன். சீன வானொலி நிகழ்ச்சிகளில் எனது மனதில் நின்ற சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன். வசந்த விழாவை முன்னிட்டு சீன பண்பாட்டு அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சியில் இடம்பெற்ற சீனப்பாடல்களை இசை நிகழச்சியில் வழங்கியது அருமை. பெய்யென பெய்யும் மழை என்ற தலைப்பில் செயற்கை மழை பற்றிய அறிவியல் உலகம் நிகழ்ச்சி நல்ல தகவல்களை தந்தது. தமிழ் நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள அனுசாட் செயற்கைக்கோள் மாணவர்களுக்கு பயன்படும் விதங்களையும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் அறிந்தது சிறப்பு.
கலை அடுத்தாக வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய கடிதம். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி கேட்டேன். அதில் சந்திர ஆய்வு வாகனம் பற்றிய சுவையான தகவல்கள் இடம்பெற்றன. ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது தலைமுறை தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த வாகனம், எதிர்கால சந்திர ஆய்வுக்கு பயன்படும். நிலவின் மேற்பரப்பில் காணப்படும் கரடுமுரடான நிலப்பரப்பில் சீராக ஓடும் வகையில் இது உருவாக்கப்ட்டிருக்கும் என்று நம்புகிறேன். மேலும், விண்வெளி ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சீனாவிற்கு இத்தகைய புதிய கருவிகள் , எதிர்காலத்தில் பெரும் உறுதுணையாக இருக்கும்.


தமிழன்பன் மட்டகளப்பிலிருந்து எ.எப். ஹஸ்னா அனுப்பிய கடிதம். சீன வானொலி நேயராக என்னை சேர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனுப்பிய சீன தமிழோலி இதழை நான் வாசித்ததோடு என்னிடமிருந்து வாங்கி பலரும் படித்து பயனடைந்தார்கள். கட்டுரைகள் அனைத்தும் வியக்க வைத்தன. எனது நண்பர்களும் உறவினரும் நேயராக சேர விரும்புகிறார்கள். அவர்களும் புதிய நேயராக சேர எல்லா ஏற்படுகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.
கலை எ. எப். ஹஸ்னா சீன வானொலியை பலருக்கும் அறிமுகப்படுத்தும் உங்களை பாராட்டுகின்றோம். வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் அவர்களும் கருத்துக்கடிதங்கள் எழுதி அனுப்பவும் தூண்டுங்கள். அடுத்தாக, சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் சி. மல்லிகாதேவி அனுப்பிய கடிதம். 50 வயதான சோ சாங்கீ அம்மையாரின் சுவையான வாழ்க்கை வரலாறு இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இவர் சூ சை நகரில் முதலில் குடியேறியவுடன் அங்குள்ள பொருட்களின் விலை மலிவு என உணர்ந்தார். அவர்களிடமிருந்து சீன மொழியை மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு சீன பண்பாட்டையும், பாடல்களையும் நேசிக்க தொடங்கினார். ஒலிம்பிக் தீபம் ஏந்துகின்ற அளவுக்கு சிறப்பான இடத்தை அவர் பெற்றது அவரது தன்னிகரற்ற பங்களிப்பால் என்று அறிய முடிகிறது.
தமிழன்பன் கீழ்குந்தா கே.கே. போஜன் சீன மக்கள் பேரவையின் கூட்டத்தொடரின் முடிவுகள் பற்றி எழுதிய கடிதம். இந்த கூட்டத்தொடரில் கல்விக்காக 19 கோடியே 80 இலட்சத்து ஆறாயிரம் கோடி யுவான் ஓதுக்கப்பட்டுள்ளது. சீனாவின் நடுவண் அரசு கிராமங்களின் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி என பலவகைகளில் இந்த தொகையை செலவு செய்யும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் சலுகைகளை அதிகரிக்கப்பட உள்ளன. மேலும் சீனாவின் தொழில் கல்வியை உயர்த்த மூன்று முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ளது பாராட்ட்த்தக்கது.

1 2