• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-26 09:43:53    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை சென்னை தியாகராய நகரிலிருந்து என் இராஜேந்திரன் நேயர் விருப்பம் பற்றி எழுதிய கடிதம். தமிழ்நாட்டின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ராஹ்மான் இசையமைத்து ஆஸ்கார் விருது பெற்ற பாடலான ஜெய் ஹோ ஒலிபரப்பானது மகிழ்ச்சியளித்தது. மேலும் உயிரே படத்திலிருந்து தக்க தைய்ய தைய்ய தைய்யா மேலும் செந்தமிழ் தேன் மொழியால், எந்தன் பொன்வண்ணமே என்ற பாடல்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டன. இனிய பாடல்களை காலத்திற்கேற்ப சிறப்பாக ஒலிபரப்பிய சீன வானொலிக்கு பாராட்டுக்கள்.
மின்னஞ்சல் பகுதி
சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி
ஒரு நாட்டின் தொன்மையான பழங்கால வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ள பெரும்பங்கு வகிப்பது தொல்பொருட்களே. அந்தவகையில் கடந்த ஆண்டு மே திங்கள் 12 ஆம் நாள் சிச்சுவானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொல்பொருட்களை சீன தேசிய தொல்பொருள் பாதுகாப்பு ஆணையம் மறுசீரமைப்பு செய்து வரும் நடவடிக்கை போற்றத்தக்கதாகும். இவ்வாறு சீனாவின் பாரம்பரிய மிக்க தொல்பொருட்கள் பாதுகாக்கப்படுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சிஅடைகின்றேன்
மதுரை 20, அண்ணாநகர், R.அமுதாராணி
எழில்மிகு சுற்றுலா மூலவளங்களைக் கொண்ட சிச்சுவானில் கடந்த ஆண்டு மே திங்கள் 12ஆம் நாள் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சீன நடுவண் அரசின் ஓராண்டு முயற்சிகளின் பலனாக சிச்சுவான் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்று வளர்வதையும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அறிந்தேன். மகிழ்ந்தேன்.


முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்
சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட ஓராண்டு நினைவு நடவடிக்கை மே 12ம் நாள் பிற்பகல் நடைபெற்தை சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்தேன். சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத் தலைவர்களும், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் நினைவு நடவடிக்கையில் கலந்து கொண்டதையும் அறிந்தேன். தலைவர்கள் செலுத்திய நினைவு அஞ்சலி, இசையுடன் மரியாதை செலுத்தும் 20 படைவீரர்கள் 10 மலர் கூடைகளை வைக்க, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் பேரிடர் நீக்கப் பணியில் பலியான வீரர்களுக்காகவும் மக்களும் அஞ்சலி செலுத்தி, நிலநடுக்கத்தால் உயிரிழந்த நாட்டு மக்களை நினைவுகூர்ந்துள்ளனர். இயற்கை சீற்றத்துக்கு பின் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் சீன மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற சீன நாட்டவர்களுடன் இணைந்து சீன தேசத்தின் ஒற்றுமையையும் இன்னல்களை கூட்டாக சமாளிப்பதென்ற மாபெரும் ஆற்றலையும் எடுத்துக்காட்டியுள்ளனர் என்று அரசுத்தலைவர் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தியது மனதை நெகிழச்செய்தது.


பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்
தைவான் இருகரை உறவின் முன்னேற்றம் என்னும் செய்தித் தொகுப்பினைக் கேட்டு இரசித்தேன். தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் தலைவர் சேன் யுன் லின் மற்றும் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியத்தின் தலைமை இயக்குனர் ஜியாங் பிங் குனும் பேச்சுவார்த்தை நடத்தி, இருகரைகளிடையே முறையான விமானப் போக்குவரத்து, நிதித் துறை ஒத்துழைப்பு, குற்றச் செயல்களைக் கூட்டாக ஒடுக்குதல் முதலிய மூன்று உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதும், சீன பெருநிலப் பகுதி தைவானில் முதலீடு செய்வது பற்றி இருதரப்பும் ஒத்த கருத்துக்கு வந்துள்ளதும் உறவு வளர்வதற்கான சிறந்த முன்னேற்றம். அமைதி நிலவ இந்த இருகரை உறவு உடன்படிக்கை நிச்சயம் கைகூடும்.
விஜயமங்கலம் குணசீலன்
சீன பொருட்கள் என்றாலே இந்தியர்களுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு. அதிலும் சீருந்து என்றால் சொல்ல வேண்டியதில்லை. சீருந்து வாங்குவதில் தனி ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு சீருந்தில் இன்பப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆகவே சீன சீருந்துகளுக்கு இந்தியாவில் என்றுமே வரவேற்பு இருக்கும். இந்திய சந்தையில் சீனா சீருந்துகளின் தேவை முக்கிய இடம்பெறும். இத்துறை பற்றி தெரிவித்த சீன வானொலிக்கு நன்றிகள்


ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன்
நேபாள அரசியல் நிலைமை எனும் செய்தித்தொகுப்பு கேட்டேன். தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள நேபாள மாவோ கம்யூனிஸ்ட் ஒன்றிணைப்பு கட்சியின் தலைவரும், தலைமையமைச்சருமான பிரசண்டா பற்றியும் அவர் பதவி விலகல் கடிதத்தை நேபாள அரசுத் தலைவர் ராம்பரன் யாதேவ் அவர்களிடம் கொடுத்த செய்தியும் அறிந்தேன். இதன் மூலம் தற்போதைய நேபாள அரசின் நெருக்கடி நிலை பற்றி அறிய முடிந்தது. அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்திடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தந்தது என்று கூறலாம்.
சென்னை, தங்க ஜெயசக்திவேல்
சீனாவின் கிராமப்புறங்களில் வாகன நுகர்வை முன்னேற்றும் சீனாவின் தற்போதைய ஊக்குவிப்பு கொள்கை, சீன கிராமப்புறங்களில் 10 இலட்சம் வாகனங்களின் தேவையை அதிகரிக்கும் என்ற செய்தியை கேட்டு மகிழ்ந்தேன். சீனாவில் உள்ள கிராமங்கள், நகரங்களை போன்று அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று வருவதை அறியும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. சீன வாகன வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் ஷென் ஜிநுன் அவர்களின் கருத்துகளை இடம்பெற செய்தது நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.
பேளுக்குறிச்சி க.செந்தில்
அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்டேன். அதில் GPS அதாவது புவியில் இடம் காட்டிதொழில் நுட்பம் பற்றி மிக விரிவாக அறிய முடிந்தது . இதுவரை அறியாத நல்ல தகவல்களை இந்த நிகழ்ச்சி மூலம் அறிந்துக் கொள்ள முடிந்தது. அனைவரின் பொது அறிவுக்கான விருந்தாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


1 2