
 முதியோர் வலைப்பூ கிராமத்தில், முதியவர்கள் இரக்க, புரிந்துணர்வு, பொறுமை ஆகியவற்றையும், தத்தமது எழுச்சிமிக்க தாயகத்தையும் கண்டறிந்துள்ளனர். இந்த வலைப்பூ கிராமம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. 500க்கு அதிகமான உறுப்பினர்கள், இம்முதியோர் வலைப்பூ கிராமத்தில் பதிவு செய்துள்ளனர். இணைய உலகத்தில், இந்த வலைப்பூ குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். இணையத் தளத்தில் உள்ள பெரும்பாலான வலைப்பூ குழுக்களில், இளைஞர்கள் தான் சேர்ந்துள்ளனர். இம்முதியோர் வலைப்பூ குழுவில் மட்டுமே, முதியவர்கள் கதா நாயகர்களாக திகழ்கின்றனர். இது, கிராமத் தலைவரின் சளையாத முயற்சியிலிருந்து பிரிக்கப்பட முடியாது.
காலை 5 மணியளவில் எழுந்தவுடன், முதலில் கணிணியைத் திறக்கின்றேன். கிராமத்தின் வலைப்பூவை பார்த்து அதில் எழுதப்பட்டுள்ள அனைத்துக்கும் பதில் அளிக்கின்றேன். ஆறரை மணியளவில் வெளியே பயிற்சி செய்யத் துவக்குகின்றேன். எட்டு மணிக்கு வீடு திரும்பியவுடன், வலைப்பூ கிராமத்தில் மீண்டும் உலாவருகின்றேன். நண்பகல் சற்று நேரம் ஓய்வு பெறுகின்றேன். பிற்பகல் தொடர்ந்து வலைப்பூ கிராமத்தில் நுழைந்து உலாவுகின்றேன். இரவு பாடல்களை பாடுகின்றேன் என்று Zhou Shuang Fu எடுத்துக்கூறினார்
1 2
|