
இந்த வலைப்பூ குழுவில், உங்களுக்கும் ஆதரவளிக்கின்றோம் என்றும், இக்கிராமத்தை செவ்வனே வளர்க்கத் தொடர்ந்து பாடுபடுங்கள் என்றும் கிராமத்தின் உறுப்பினர்கள் பலர் கூறினர். அவர்கள் கூறியவை, Zhou Shuang Fuஐ மனமுருகச்செய்கின்றன. தமது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்று Zhou Shuang Fu கருதுகிறார்.
முதியோர் வலைப்பூ கிராமத்தில், மகிழ்ச்சியைப் பெற்று, தமது திறனை வெளிக்கொணர்ந்து, அதிக அறிவை பெற்றுக்கொண்டு, வாழ்வை அனுபவிக்க முடியும் என்று Zhou Shuang Fu கூறினார்.
சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்துள்ளது. முதியவர்களின் உடை, உணவு, உறைவிடப் பயன்பாடு, போக்குவரத்து வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை தவிர, அவர்களின் எழுச்சிமிக்க வாழ்க்கையிலும் பலர் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். முதியோர் வலைப்பூ கிராமம் ஏற்படுத்தியுள்ள அன்பும், மகிழ்ச்சியும், மேலதிக முதியோருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன. 1 2
|