• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-01 12:39:44    
சுட்டும் விழிச்சுடரே

cri

என் தயார் மறையும்பொது அவருக்கு வயது 84. இறுதிவரை அவர் கண்ணாடி அணியும் தேவை ஏற்படவில்லை. அவரது பேத்தி அதாவது என் அக்காவின் மகளுக்கு மூன்றாம் வகுப்பிலிருந்தே மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்லும் சிறு வயதிலேயே சோடாபுட்டி கண்ணாடிகளை பயன்படுத்தும் நிலை வந்ததெப்படி? வயதானாலும் தெளிவான பார்வை கொண்டிருந்த தலைமுறை மறைந்து போவதன் மர்மம் தான் என்ன?

இது தொடர்பான ஆய்வொன்று நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையாக பல படிப்பினைகளை சுட்டிக்காட்டுகின்றது. வீட்டிற்குள் விளையாடுவதைக் காட்டிலும் வெளியில் விளையாடுவது, சிறுவர்களின் கண்பார்வைக்கு சிறந்தது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டிலே அடைந்து கிடப்பதை தவிர்த்துவிட்டு, வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் அதிக நேரம் செலவழிப்பவர்கள் தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகமாட்டார்கள் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் திறந்த வெளியில் இல்லாத வீடுகள் அல்லது கட்டிடங்களுக்கு உள்ளேயே அதிகமாக செயல்படுவது, தூரப்பார்வை பிரச்சனைக்கு காரணமாவதாக கூறியுள்ளனர். மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை உடையவர்களாக மாறுகின்ற சிறுவர்களுக்கு தூரத்தில் உள்ள பொருட்களை தெளிவாக பார்ப்பதில் சிக்கல்கள் உண்டாகிறது.

13 வயதான 191 பதின்வயதினரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் பெற்றோரிடம் ஒரு தொகுதி கேள்விகளை அளித்து விடையளிக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களது பிள்ளைகள் கணினியை பயன்படுத்துவது, பொழுதுபோக்கிற்காக வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பிற விபரங்களையும் கேட்டறிந்து கொண்டனர். அந்த சிறுவர்களின் கண்பார்வை ஆண்டுதோறும் சோதனை செய்யப்பட்டது. அதிலிருந்து கிடைத்த முடிவுகள், கண் மருத்துவம் மற்றும் பார்வை பற்றிய அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. அதன்படி ஒரு வாரத்திற்கு 8.3 மணிநேரமே வெளிப்புறங்களில் நேரத்தை செலவிட்டவர்கள் அதிகமாக கிட்டப்பார்வை உடையவர்களாக இருந்தனர். ஆனால் மற்றவர்கள் வாரத்திற்கு 12.6 மணிநேரங்கள் செலவிட்டிருந்தனர். கிட்டப்பார்வையுடையவர்கள் வாரத்திற்கு 12.5 மணிநேரமும், பிறர் 8.4 மணிநேரமும் தொலைக்காட்சி பார்க்கின்றவர்களாக இருந்தனர்.

வீட்டிற்குள்ளே அருகிலுள்ள பொருட்களை எப்போதும் பார்த்து கொண்டே இருப்பதால், சிறுவர்களின் தொலைத்தூரப் பார்வைக்கான பயிற்சி இல்லாமல் அத்திறன் குறையும் வாய்ப்பு அதிகமுள்ளது. பயன்படுத்தப்படாத பொருள் பாழாகி போவதைபோல தான் இதுவும். வெளியில் சூரியஒளியில் தெரிகின்ற பொருட்களை குறிப்பாக, கூர்மையாக பார்க்கின்றபோது தூரப்பார்வை திறனை வளர்த்து தெளிவாக பார்ப்பதற்கு பயிற்சி கிடைக்கிறது. வீடுகளிலும், கட்டிடங்களிலும் முடங்கிவிடாமல் வெளிபுறத்தில் அதிகமாக செலவிட்டால் இந்த கிட்டப்பார்வை திறன் மட்டுமே பெறும் வாய்ப்புக்கள் குறையலாம். அதாவது, வீடுகளில் அல்லது கட்டிடங்களில் உள்ள பொருட்களை மிக அருகில் இருந்து பார்ப்பதை விட சூரிய ஒளியிலுள்ள பொருட்களை தெளிவாக பார்த்து கிட்டப்பார்வை திறன் மட்டுமே அதிகரிப்பதை தடுக்கலாம்.

1 2