• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-01 12:39:44    
சுட்டும் விழிச்சுடரே

cri

இப்படிப்பட்ட கண்பார்வை குறைபாடு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான காரணங்களால் உருவாகிறது. நம்மால் நம் மரபணுக்களை மாற்ற முடியாது. ஆனால் சிறுவர்களிடம் கிட்டப்பார்வை மிக வேகமாக அதிகரிக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கு சுற்றுச்சூழல் தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அருகிலிருந்து செய்யும் வேலைகளில் எடுத்துக்காட்டாக படிப்பது, கணினிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. 30 முதல் 45 நிமிடங்களுக்கு இந்த வேலைகளைச் செய்துவிட்டு கண்களுக்கு சற்றுஓய்வு கொடுத்து ஜன்னலுக்கு வெளியே தூரத்திலுள்ள இடத்தை பார்த்து கண்களுக்கு பயிற்சி அளிப்பது சிறந்தது. கணினி விளையாட்டில் குழந்தைகள் அடிமையாகாமல் இருக்கும்விதம் பழக்கப்படுத்த வேண்டும். தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு பதிலாக மிதிவண்டி ஓட்டுதல், மீன் பிடித்தல், விளையாடுதல், ஓடுதல் ஆகியவை, ஓய்வெடுக்கவும் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்த்து பயிற்சியளிக்கவும் உதவுகின்றன.

சிறுவர்கள் கண்ணாடி இல்லாமலே படிக்க முடியும் என்றால் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு படிக்க செய்யுங்கள். வீட்டில் போதுமான வெளிச்சம் பரவியிருக்க வசதி செய்யுங்கள். கிட்டப்பார்வை அதிகமுள்ளவர்களால் தூரத்தில் உள்ளவற்றைவிட அருகில் இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். இப்படிப்பட்டவர்கள் அணியும் கண்ணாடி தூரத்தில் இருப்பவற்றைப் பார்ப்பதற்கே. எனவே கிட்டப்பார்வை உடைய சிறுவர்கள் வீட்டில் நன்றாகப் பார்க்க முடிகிறது என்றால் வீட்டிற்குள் தேவையில்லாமல் கண்ணாடி அணிவதை தவிர்க்க செய்யுங்கள்.

சிறுவர்களின் திறந்த வெளியிலான பல செயல்பாடுகளை ஊக்குவிப்பது மிகவும் நல்லது. அது விளையாட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. தூரத்திலுள்ள பொருட்களை பார்க்கின்ற திறன் பாதிக்கப்படுவதை குறைக்க குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் அனைவரும் திறந்த வெளியில் இருந்து செயல்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று Cornell பல்கலைக்கழகத்தின் அறிவியல் பேராசிரியர் Howard C. Howland தெரிவித்தார்.

சிறு வயதில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றால், மதிய உணவை மறந்து சக நண்பர்களோடு, கிட்டிப்புள், கோலி, பந்தாட்டம், தொட்டு விளையாட்டு, திருடன் போலீஸ் போன்ற விளையாட்டுகளிலும், வேட்டை, மீன் பிடித்தல் ஆகியவற்றிலும் பங்கெடுத்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்து நன்றாக வாங்கிகட்டிக் கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. இருப்பினும் இன்றுவரை கண்ணாடியில்லாமல் பார்ப்பதற்கு அந்த வெளிபுற செயல்கள் மறைமுகமாக உதவியிருப்பது இந்த ஆய்வு கட்டுரை படித்த பின்னர் தான் புரிகிறது.


1 2