• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 11:24:45    
சான் யா நகரில் சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சைப் பயணம்

cri
கடந்த சில ஆண்டுகளாக, மென்மேலும் அதிகமான ரஷிய பயணிகள் குளிர்காலத்தில் சீன ஹை நான் மாநிலத்தின் சான் சா நகருக்கு வர விரும்புகின்றனர். அவர்களின் பார்வையில், வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள சான் யா நகரில், சூரிய ஒளி, கடல் நீர், மணல் நிலம், வெப்ப ஊற்று நீர் முதலிய சுற்றுலா மூலவளங்களைத் தவிர, தனிச்சிறப்புடைய சீன பாரம்பரிய மருத்துவமும் அவர்களுக்கு உடல் நலத்தைக் கொடுக்கலாம்.

சான் யா சீனப் பாரம்பரிய மருத்துவமனையில், அலிசா எனும் ரஷிய பெண்மனி, அக்குபங்ச்சர் சிகிச்சை பெற காத்திருக்கின்றார். எமது செய்தியாளர் அவருடன் உரையாடினார்.

சிதா எனும் இடத்தைச் சேர்ந்த அவர் சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற சிறப்பாக சான் யா வந்தார். அவரது கருத்தில், சீனப் பாரம்பரிய மருத்துவம் தலைச்சிறந்த மருத்துவமாகும்.

சீனப் பாரம்பரிய மருத்துவம், இயற்பியல் வழி மூலம், இயற்கை மூலிகையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கின்றது. இது மனித உடலுக்கு ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறைவு. களைப்பை நீக்குதல், உடலுக்குள்ளேயான சுரப்புகளைச் சரிப்படுத்துதல் முதலியவற்றில் குறிப்பிடத்தக்க சிகிச்சை பயன் பெறலாம். 2002ம் ஆண்டு முதல், சான் யா சீனப் பாரம்பரிய மருத்துவமனை வெளிநாட்டுப் பாரம்பரிய மருத்துவத் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சையையும் வெப்ப மண்டலப் பயணத்தையும் இணைத்து, சீனப் பாரம்பரிய மருத்துவ சுற்றுப் பயணத்தைத் துவக்கியது. பல ரஷிய பயணிகள் சிறப்பு விமானம் மூலம், சான் யாவுக்கு வருகின்றனர். அவர்கள் முற்பகலில் சுற்றுலா செய்து, பிற்பகலில் சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் பசுமை சிகிச்சை என்ற அற்புதத்தை அவர்கள் முழுமையாக அனுபவிக்கின்றனர்.

இந்த சிறப்புச் சுற்றுப் பயணம் ரஷிய பயணிகளிடையில் வரவேற்கப்படுவதற்கான காரணம் பற்றி சான் யா மருத்துவமனையின் தலைவர் liu de xi விளக்கம் செய்தார். ரஷியாவில் மிகக் குளிரான தட்பவெப்ப நிலையினால், பல மக்கள் மடக்கு வாதம், கீல்வாதம், உயர் இரத்த கொழுப்பு அளவுக்கு மீறிய கொழுப்பு முதலிய தீர்க்கபடாத நோய்களுக்குள்ளாகின்றனர். சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துகின்றது. பக்க விளைவுகள் குறைவு. மேலும், வெப்ப மண்டல வானிலையால், சான் யா நகரம் சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கும் நல்ல இடமாக உள்ளது என்று அவர் கூறினார்.. சீனப் பாரம்பரிய தலைமை மருத்துவர் li zhen shan கூறியதாவது

1 2