• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 11:24:45    
சான் யா நகரில் சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சைப் பயணம்

cri

சீனப் பாரம்பரிய மசாஜ், அக்குபங்ச்சர், மூலிகை மருந்து ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கின்றோம். அதேவேளையில், வேறு சிறப்பான சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை வழிகளைப் பயன்படுத்துகின்றோம் என்றார் அவர்.

சிறப்பான சிகிச்சை பெற்று பல ரஷியகள் குணம் அடைந்து செல்கின்றனர். தற்போது, மென்மேலும் அதிகமான ரஷிய மக்கள் அக்குபங்ச்சர், மசாஜ், மூலிகை மருந்து குளியல் முதலிய வழிமுறைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

58 வயதான ஈபஃன் சான் யாவில் பயணம் செய்வது இது 2வது முறையாகும். ஒவ்வொரு முறையும் சிகிச்சை பெற அவர் சீனப் பாரம்பரிய மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை மூலம், அவரது கழுத்து எலும்பு, புட்டப்பகுதி வலி குறைந்தது என்று ஈபஃன் கூறினார். அவர் கூறியதாவது,

கோடைக்காலத்தில் தொடர்ந்து பணி புரிய வேண்டும். ஓய்வு நேரம் குறைவு. சிகிச்சை பெற குளிர்காலத்தில் இங்கே வரலாம். சிகிச்சை மூலம் கழுத்து எலும்பு வலி ஓரளவு குணம் அடைந்தது. இது மிகவும் அற்புதமானது என்றார் அவர்.

2002ம் ஆண்டு துவக்கத்தில், செர்நோபில் அணு மின் நிலையத்தின் வெடி விபத்தில் காயமுற்ற சிலர் சான் யா வந்து சீனப்பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற்றனர். அதே ஆண்டு மார்சு திங்கள், ரஷிய தேசிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம், சான் யா சீனப் பாரம்பரிய மருத்துவமனையுடன் 5 ஆண்டு கால சுற்றுலா உடன்படிக்கையை உருவாக்கியது. இந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் இந் நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆயிரம் பணியாளர்கள் சீனப்பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற இங்கே அனுப்பப்படுகின்றனர். தவிர, 2006ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும், ரஷியாவின் பெஸ்லான் பள்ளியிலான பணயக்கைதி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இங்கே சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சான் யா நகரில், he sheng tang எனும் சிகிச்சை மற்றும் ஓய்வு மையம், ரஷிய பயணிகளிடையில் மிக புகழ்பெற்ற இடமாகும். 5000 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இந்த மையத்தில், பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பாக அழைக்கப்பட்ட சீனப் பாரம்பரிய மருத்துவர்கள் சிகிச்சை சேவை அளிக்கின்றனர். ரஷியா, கசகஸ்தான் முதலிய நாடுகளின் தலைவர்கள் இதன் புகழை அறிந்து இங்கே சிறப்பாக வந்து சிகிச்சை பெற்றனர். இம்மையத்தின் பொது மேலாளரின் துணையாளர் xu ruo hong கூறியதாவது

ஆண்டின் துவக்கத்தில், அதிக ரஷிய பயணிகள் இங்கே வருகின்றனர். ஒவ்வொரு சிகிச்சை நிலையத்திலும் விருந்தினர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். அவர்கள் சீனப் பாரம்பரிய மருத்துவத்தை மிகவும் நம்புகின்றனர். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், இங்கே வந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார் அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவையை நிறைவேற்ற, இவ்வாண்டு முதல், சான் யா நகராட்சி, உடல் நலம் பற்றிய சிகிச்சை மற்றும் ஓய்வு சுற்றுலா நிகழ்ச்சிகளின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி வருகின்றது. இந்நகரத்தின் சுற்றுலா சுங்கத்தின் துணை தலைமை செயலாளர் li qing கூறியதாவது

சுற்றுப் பயணம் மேற்கொள்வதோடு, சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெறுவது ரஷிய மக்களிடையில் பரவலாகியுள்ளது. சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பயணம் என்ற நடவடிக்கையின் வளர்ச்சியை சான் யா நகராட்சி மேலும் ஆதரிக்கும். வெளிநாட்டு நண்பர்களை மேலும் அதிகமான சீனப் பண்பாட்டை அனுபவிக்க செய்ய பாடுபடுவோம் என்றார் அவர்.

அக்குபங்ச்சர், மசாஜ், சீனப் பாரம்பரிய மருத்துவ அறிவுகளைக் கற்றுக்கொள்ள, ஆஸ்திலியா, ஸ்வீடன் முதலிய நாடுகளிலிருந்து பல மருத்துவவியல் மாணவர்கள் சான் யாவுக்கு வருகின்றனர். இந்நகரின் சீனப் பாரம்பரிய மருத்துவ நிறுவனங்களும், ரஷியா, கசகஸ்தான் முதலிய நாடுகளின் தொடர்புடைய வாரியங்களுடன் சிகிச்சை மற்றும் பயிற்சி உடன்பிடிக்கைகளை உருவாக்கியுள்ளன. எதிர்காலத்தில், சான் யா நகரின் சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைப் பயணம், சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத்தை விரைவுப்படுத்துவதற்கு மேலும் ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்று நம்புகின்றோம்.


1 2