• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:28:16    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் நீங்கள் அனுப்பிய கடிதங்கள் மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற கருத்துக்களை நேயர்கள் அனைவருக்காகவும் தொகுத்து வழங்க இருக்கின்றோம்.
கலை நேயர்களே ! நிகழ்ச்சிக்கு முன்னால் உங்களுக்கு நினைவூட்டல் செய்தி ஒன்று. அருமையான திபெத் என்னும் சுற்றுலா இணையதள பொது அறிவு போட்டியின் கடைசி நாள் மே திங்கள் 31. எனவே அதற்கு முன்பே உங்களது பங்கேற்பை பதிவு செய்யுங்கள். அதிக கடிதங்கள் எழுதி அனுப்பி புகழ்பெற்றுள்ள தமிழ்ப் பிரிவின் நேயர்களே இணையதளம் மூலம் நடத்தும் இப்போட்டியிலும் அதிகமான தமிழ் நேயர்கள் பங்கேற்றனர் என்ற சிறப்புபெறுவதை விரும்புகின்றோம். எனவே அதிகமான நேயர்கள் பங்கேற்கும் விதத்தில் அனைவரையும் இந்த போட்டியில் பங்கேற்க தூண்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் சீன வானொலி இணைய பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள எட்டு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து திபெத் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்து உங்களது சரியான முழு விபரங்களையும் சரியாக எழுதி இணையதளம் மூலமாகவே அனுப்புங்கள். மதிப்புக்குரிய பரிசுகளை தட்டிச் செல்லும் நபராக நீங்கள் இருக்க முடியும். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
கலை நிகழ்ச்சியின் முதலாவதாக சின்னவளையம் கு. மாரிமுத்து இன்றைய திபெத் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். திபெத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடைமுறைகள் மக்களின் வாழக்கைக்கு உகந்ததாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் இருப்பது தெரிய வருகிறது. திபெத் மக்களின் வளர்ச்சியை பற்றியும், அந்த வளர்ச்சியை படம் பிடித்து காட்டுகின்ற விதமாக அமைந்த திபெத்தின் பொன்விழா கண்காட்சியை பற்றியும் பல்வேறு தகவல்களை சீன வானொலி மூலமாக கேட்டு வருகிறேன். திபெத் மக்களின் முன்னேற்றம் உலக மக்களுக்கே ஒரு பாடமாகும். இது பற்றி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை வழங்கிவரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு எனது மனமார்ந்த நன்றி


தமிழன்பன் அடுத்தாக மலேசியாவிலிருந்து திரு. இராமசந்திரன் மற்றும் லலிதா நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன மண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. எனக்கு பிடித்தமான சில பாடல்கள் அவ்வப்போது ஒலிபரப்பாவதால் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருகின்றேன். சீன வானொலியில் ஒலிபரப்பான செல்லக்கிளியே, ஆசை ஆசை, மனசுக்குள்ளே ஆகிய பாடல்களை நான் மிகவும் விரும்பி கேட்டேன்.
கலை தொடர்வது, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகா தேவி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சியில் திபெத் தாங்கா ஓவியம் பற்றி அறிந்தேன். இது வண்ண தூரிகையால் பட்டு துணியில் தீட்டப்படுவதையும், கனிமப் பொருட்களால் ஆன வண்ணக்கலவை அதாவது இயற்கையாக வண்ணம் அமைத்து ஓவியம் வரையப்படுவதால், நீண்ட காலத்திற்கு வண்ணம் மங்காமல் என்றும் புதியதாய் இருப்பதையும் அறிந்தேன். 35 புத்தர் உருவங்கள் தாங்கா ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளதாம். மதிப்பு உயர்வாய் அமைந்து, வெளிநாட்டினரை கவர்ந்து, திபெத்தியரின் பண்பாட்டு கலையை உள்ளங்கை நெல்லிக்கனியாய் மிளிர செய்வதும் தான் தாங்கா ஓவியத்தின் சிறப்பு. இந்நிகழ்ச்சியை செவிமடுத்த நேயர்கள் அனைவருக்கும் தாங்கா ஓவியத்தை சென்று கண்ணாரக்கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். தாங்கா ஓவியம் பட்டுத் துணியில் கை வண்ணம்.
தமிழன்பன் மீனாட்சிபாளையம் கா. அருண் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். ஜப்பான் இளைஞர்கள் சீனாவில் மேற்கொண்ட நட்புறவு பயணம் பற்றி கேட்டேன். சீன இளைஞர்களுடன் இணைந்து அவர்கள் மேற்கொள்ளும் நட்புறவு பரிமாற்றம், உறுதியான அடிப்படையாகி எதிர்கால ஜப்பான் சீன தலைமுறையினரின் உறவை மேம்படுத்தும். அண்டை நாடுகள் இரண்டும் இத்தகைய நடைமுறைகளை அதிகரித்து வருவது, மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.
கலை அடுத்தாக இராமபாளையம் கே. எஸ். அபிராமி சீனாவில் இன்பப்பயணம் பற்றி எழுதிய கடிதம். இந்நிகழ்ச்சியில் சீனாவின் சென்சின் நகரத்தின் வசந்தவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. அங்கு பலவித இசை நாடகங்களும், நாட்டுபுற கலைகளும், பழைய திரைப்பட பாடல்களும் திரையிடப்படும் என்ற செய்தியை அறிந்தேன். இவ்வாறு புதிய, அரிய பல செய்திகளை அறிய தரும் சீன வானொலிக்கு நன்றிகள்.


தமிழன்பன் தொடர்வது என். எஸ். பாலமுரளி செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். செய்திகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சீன சிறப்பு தூதரின் வேண்டுகோள் பற்றி கேட்டேன். பாலஸ்தீனமும், இஸ்ரேலும், தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை அவசரமாக நிறுத்த வேண்டும் என்று சீன தூதர் சுன்பிகான் கேட்டுக்கொண்டார். இருநாடுகளும் இந்த கோரிக்கையை மதித்து, ஏற்று, அப்பாவி மக்கள் இறப்பதை தவிர்த்து, அமைதி, ஒற்றுமை நிலவ வழி செய்ய வேண்டும்
கலை உத்திரக்குடி சு. கலைவாணன்ராதிகா சீன இசை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். வசந்தவிழாவிற்கு ஏற்ற பாடல்களை இந்நிகழ்ச்சியில் இடம்பெற செய்தது இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. சீனாவின் பாரம்பரிய விழாவை நினைவூட்டும் விதமாக அமைந்த காளையின் சுறுசுறுப்பை விளக்கும் பாடலும், சீனாவின் வண்ணமான சிவப்பு நிறம் பற்றிய பல்வேறு தகவல்களை கொண்ட பாடல்கள் சிறப்பு சேர்த்தன. யாங்கு நடனம் புகழ்பெற்றவை என்று அதற்கு ஒத்தப் பாடலை ஒலிபரப்பியது இரசிக்க வைத்தது.
தமிழன்பன் அடுத்தாக சேலம் எ. வேலு விளையாட்டு நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். இதில் குளிர்கால விளையாட்டு போட்டி பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. நுழைவுச்சீட்டு விற்பனை, ஸ்னுக்கர் தொடர் போட்டி, கூடைபந்து போட்டி, 2009 கத்தார் டென்னிஸ் போட்டி, 2009 டாக்கார் வாகன பந்தையம், சீன ஆடவர் கூடைபந்து போட்டி, 2010 வேன்கூவர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளின் செய்திகளை தொகுத்து வழங்கியது பாராட்டத்தக்கது.
கலை தொடர்வது ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சி 29 வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்றதை நினைவூட்டி மகிழ்ச்சியளித்தது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நீண்டகால வரலாறு உடையது. அந்த வரலாற்றிலேயே மிக அதிகமான நாடுகள் மற்றம் பிரதேசங்கள் பங்கேற்று சாதனை படைத்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் மட்டுமல்ல, உலக மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

1 2