• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:28:16    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் மெட்டாலா எஸ். பாஸ்கர் செய்தித் தொகுப்பு பற்றி அனுப்பிய கடிதம். சீன அமெரிக்க தூதாண்மை உறவு 30 ஆண்டுகளை எட்டியுள்ளது. இருநாடுகளும் உலகின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீன அமெரிக்க நட்புறவு சீரான முறையில் வளர்ந்து வருகிறது. இரு நாட்டின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வின் அடிப்படையும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அண்டை நாடுகளுடன் தோழமை உணர்வுகளுடன் சீனா செயல்படுவதால் தான் தனது நட்பை சீரான முறையில் வளர்த்து வருகிறது என்பதை அறிந்து கொண்டேன்.
கலை மதுரை அண்ணாநகர் அமுதாராணி செய்தி தொகுப்பு பற்றி எழுதிய கடிதம். கப்பல்களை பாதுகாக்கும் பணியில் சீனா என்ற கட்டுரையை கேட்டேன். சோமாலிய கடற்கொள்ளையரால் கப்பல்கள் கடத்தப்படுவதை தடுக்க ஐநா முறைப்படி இராணுவத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, ஐநாவின் அனுமதி பெற்றுள்ள நிலைமையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து சோமாலிய கடற்கொள்ளையரை ஒடுக்கும் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதாகும். இச்செயல் சீனா அண்டைய நாடுகளின் கூட்டாளி உறவை பேணிகாத்து வருவதையும், உலக நாடுகளின் இன்னல்களை தீர்க்க பாடுபடுவதையும் காட்டுகிறது.


மின்னஞ்சல் பகுதி
துறையூர் த. குறிஞ்சிகுமரன்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை செவிமடுத்தேன். அழகான சிச்சுவான் பொது அறிவுப் போட்டியில் சிறப்பு பரிசை முணுகப்பட்டு திரு. கண்ணன்சேகர் அவர்கள் பெற்றார் என்பதை தமிழ்ப் பிரிவு தலைவர் திருமதி கலையரசி அம்மையார் கூறக்கேட்டேன். திரு. கண்ணக்சேகர் 29 ஆண்டு காலமாக நமது சீன வானொலியை தொடர்ந்து கேட்டு வருகிறார் என்றும், முதன்முதலாக தோல்பை பரிசு பெற்றதையும் அவர் நினைவு கூர்ந்து மகிந்தார். மேலும் அவர் சீன வானொலி மூலம் சீனாவை பற்றிய பல தகவல்களை அறியவும், பயனுள்ளதாகவும் உள்ளது என்று கூறினார். மனக்கண் மூலம் சீனாவை அறிந்த அவர் நேரடியாக சீனாவை கண்டுகளிக்க உள்ளார் என்பது எனக்கும் நேயர்களுக்கும் பெருமையான விடயம் தான்.
ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன்
இலங்கையில் தேசிய இணக்கத்துக்கு தேவைப்படும் நீண்ட கால முயற்சி எனும் செய்தித் தொகுப்பு கேட்டேன். இதில் இலங்கை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்த தகவல் பற்றியும், இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் இதன் மூலம் அறிந்தேன். இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச அளவில் அனைவராலும் அறியப்பட்ட முக்கியமான நிகழ்வு என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது உள்நாட்டுப் மற்றும் இலங்கையின் இறையான்மைக்கு தொடர்பான பிரச்சனையாகவும் தெரிந்தாலும், இது மனிதாபிமானம் மற்றும் உணர்வு தொடர்பான பிரச்சனையுங்கூட. ஒரு சுதந்திர நாட்டில் இரு இன மக்களுக்கு இருவேறு உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படுவது சரியாக அமையாது என்றே தோன்றுகிறது.


விஜயமங்கலம், குணசீலன்,
இலங்கை தமிழரின் உரிமை போராட்டத்திற்கு ஆயுத வலிமையால் முற்றுப்புள்ளி வைத்துள்ளது இலங்கை அரசு. ஆயுத போராட்டம் தணிந்தாலும் தமிழின உரிமைகளுக்கான போராட்டம் ஓயப்போவதில்லை. எனவே இலங்கை அரசு அத்தீவில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கி, இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை விரைவில் கண்டு அங்குள்ள தமிழர்களின் வாழ்வை வளம்பெற செய்ய வேண்டும்.
இதே கருத்தை பகளாயூர், பி.ஏ. நாச்சிமுத்து, S.K.பாப்பம்பாளையம், பி.டி. சுரேஷ்குமார், ஓடயக்காட்டூர் ராமசாமி ஆகியோரும் இணைந்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, தங்க ஜெயசக்திவேல்
தென்கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநகராட்சி தலைவர்களின் கூட்டம் குறித்த அன்றைய செய்திப் பல தகவல்களை எமக்கு தந்தது. குறிப்பாக பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவை குறைக்கவும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும் பாடுபடும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர்பான உருப்படியான செயற்திட்டத்தை படிப்படியாக நடைமுறைப்படுத்தும் வகையில் தொடர்புடைய பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்தப்படுள்ளனர் என்பதை அறியும்போது, வரும் தலைமுறை தூய காற்றினை சுவாசிக்க ஒரு அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் மொத்தம் 70க்கும் அதிகமான நகரங்களின் 400க்கும் மேலான பிரதிநிதிக் குழுக்கள் கலந்து கொண்டது என அறியும் போது வரும் காலம் நம்பிக்கையாக உள்ளது.


பேளுக்குறிச்சி க.செந்தில்
அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்டேன். அதில் GPS அதாவது புவியில் இடம் காட்டிதொழில் நுட்பம் பற்றி மிக விரிவாக அறிய முடிந்தது . இதுவரை அறியாத நல்ல தகவல்களை இந்த நிகழ்ச்சி மூலம் அறிந்துக் கொள்ள முடிந்தது. அனைவரின் பொது அறிவுக்கான விருந்தாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மதுரை, அண்ணாநகர், என்.ராமசாமி
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட மருந்துவ ஆய்வின்படி சளிக்காய்ச்சல் ஏ நச்சியிரி பெருமளவில் தொற்றுவதற்கான நிலைமை தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுபாடுகள் ஏற்றவை சரியானவை பயனுள்ளவை என்பதை நடைமுறை செயல்பாடுகள் காட்டியுள்ளன. சீனாவின் பெருநிலப்பகுதியில் சளிக்காய்ச்சல் ஏ நச்சுயிரி பரவலாம் என்ற அபாயத்தை கருத்தில் கொண்டு அதை தடுப்பதற்கு முன்கூட்டியே தக்க தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுவருவது பாரட்டுதற்குரியது.


1 2