• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-03 15:35:58    
Wang Huiyao

cri

1978ஆம் ஆண்டு சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில், 10 இலட்சத்துக்கு அதிகமான சீன மக்கள் தாய்நாடு வளமடையவும் தாம் திறமைசாலியாக இருக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்றனர். அவர்களில் சிலர் படிப்பை முடித்த பின் நாடு திரும்பி, பொருளாதாரக் கட்டுமானத்தில் உற்சாகத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் கற்றுக் கொண்ட முன்னேறிய அனுபவங்களும் கருத்துக்களும், சீனாவின் நவீன மயமாக்கப் போக்கில் முக்கிய பங்காற்றியுள்ளன. மேலை நாடுகளிலிருந்து திரும்பிய சீன மாணவர் மன்றத்தின் துணைத் தலைவரும் இம்மன்றத்தைச் சேர்ந்த வணிக அலுவலகத்தின் தலைவருமான Wang Huiyao அவர்களின் அனுபவங்கள், வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பிய சீன மக்களின் வாழ்க்கையை அடையாளப்படுத்தும் குட்டி எடுத்துக்காட்டாகும்.

1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவு தேர்வு மீட்கப்பட்டதற்குப் பிந்தைய முதல் தொகுதி பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவராக Wang Huiyao திகழ்வதோடு, மிக முன்னதாக வெளிநாடுகளுக்குச் சென்று வணிக நிர்வாகத் துறையின் முதுகலை பட்டத்துக்காக கல்வி பயின்ற மாணவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

"அப்போது வெளிநாட்டில் வணிக நிர்வாகத் துறை இருப்பதை பற்றி அறிந்து கொண்டது முதல்முறை. நிர்வாகம், ஏற்பாடு, நிதி விவகாரம், பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றை ஒரே முறையில் கற்பது மிகவும் நல்லது என உணர்கின்றேன். எனவே இத்துறையில் முதுகலை பட்டம் பெறும் எண்ணம் ஏற்பட்டது" என்று Wang Huiyao கூறினார்.

படிப்பை முடித்த பின், வெளிநாட்டில் பணிபுரிய அவர் முதலில் தெரிவு செய்தார். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின் வெளிநாட்டில் கல்வி பயின்ற முதல் தொகுதி சீன மாணவர் என்ற தகுநிலை அவருக்கு பல வாய்ப்புகளை தந்தது. சீன மற்றும் வெளநாட்டு அரசு வாரியங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் அவர் வேலை செய்திருந்தார். ஆனால் 1990ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில், வெளிநாட்டில் அவரது இலட்சியம் முன்னேற்றம் அடைந்த காலத்தில் இருந்த போது, நாடு திரும்பி தொழில் நடத்தும் பாதையை அவர் உறுதியாக தெரிவு செய்தார். அவர் கூறியவதாது—

"அப்போது நல்ல வாய்ப்பாகும் என கருதினேன். தாய்நாட்டில் வளர்ந்ததால், தாய்நாடு மீதான எனது அன்புணர்வு மிக ஆழமானதாக இருக்கிறது. மேலும், சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கு சர்வதேச மயமாக்க திறமைசாலிகள் பெருமளவில் தேவைப்படுவார்கள்" என்றார் அவர்.

வெளிநாட்டில் கல்வி பயின்று நாடு திரும்பிய முதல் தொகுதி மாணவராக, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மற்றவர் மீது Wang Huiyao கவனம் செலுத்துவது இயல்பே. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர், புதிய சமூக நிலையில் உள்ளவராகவும், அலட்சியம் செய்யப்பட முடியாத ஆற்றலாகவும் மாறியுள்ளனர் என்று அவர் கருதுகிறார். சீனாவின் புகழ்பெற்ற இணையதள நிறுவனமான sohu, baidu ஆகியவற்றின் நிறுவனர் வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பியவர். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன மக்களின் வாழ்க்கை மாற்றத்துக்கும் அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இத்தகையவர்களை ஒன்று திரட்டி, அவர்களின் சொந்த இலட்சியத்தை நாட்டின் வளர்ச்சி திசையுடன் இணைப்பது என்பது Wang Huiyao அடிக்கடி யோசிக்கும் அம்சமாகும்.

21வது நுற்றாண்டில் நுழைந்த பின், சீனாவின் பொருளாதாரம் மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மக்களில் நாடு திரும்பி வியாபாரம் செய்யும் அல்லது தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பின்னணியில், 2002ஆம் ஆண்டு அக்போடர் திங்கள் மேலை நாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர் மன்றத்தின் வணிக அலுவலகம் Wang Huiyaoவின் யோசனைப்படி நிறுவப்பட்டது. இது, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர் என்ற புதிய நிலையில் உள்ளவருக்கு அமைப்பு ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள் பரிமாற்றம் செய்யக் கூடிய மேடையை வழங்குகிறது. இது பற்றி Wang Huiyao கூறியதாவது—

"மேலை நாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர் மன்றம் நீண்ட வரலாறுடைய அமைப்பாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின், இவ்வமைப்பு மாற்றத்தை எதிர்கொண்டது. 90 விழுக்காட்டுக்கு மேலான மாணவர்கள் சொந்த செலவில் வெளிநாடுகளில் கல்வி பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழில் நடத்துவோராவர். 2002ஆம் ஆண்டில்தான், வணிக அலுவலகத்தை உருவாக்கி, பொருளாதார மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என நான் மேலை நாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர் மன்றத்திடம் முன்மொழிந்தேன்" என்றார் Wang Huiyao.

1 2