
தற்போது இவ்வணிக அலுவலகத்தில், சீனாவுக்குத் திரும்பி தொழில் நடத்தும் திறமைசாலிகள் இடம்பெறுகின்றனர். NASDAQ பங்குச் சந்தையில் நுழைந்த சீன தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய பொருளாதாரத்தின் பிரதிநிதிகள், உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களின் சீனாவிலுள்ள பிரதிநிதிகள், சீன அரசு சார் தொழில் நிறுவனங்கள் மற்றும் சீன வெளிநாட்டு கூட்டு முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் அவர்களில் உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களிடையே தொடர்பை வலுப்படுத்துவதோடு, அவர்கள் அறக்கொடைப் பணியை மேற்கொண்டு சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கும் மேடையாகவும் இவ்வணிக அலுவலகம் மாறியுள்ளது.
"கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சீன ஹோட்டலில் ஆண்டுக் கூட்டம் நடத்துகின்றோம். ஒவ்வொரு முறையும் சுமார் ஆயிரம் பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். வறியவருக்கும் நலிந்தோருக்கும் உதவ நிதி திரட்ட ஒவ்வொரு ஆண்டும் அறக்கொடை நடன கூட்டம் நடத்துகின்றோம்" என்று Wang Huiyao கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பியோரின் அறிவாற்றலையும் முன்மொழிவு மற்றும் வழிமுறையை வழங்கும் பங்கையும் தட்டியெழுப்புவதற்கு Wang Huiyao முக்கியத்துவம் தந்துள்ளார். அரசு வாரியத்துக்கு அவர் பல முன்மொழிவுகளை வழங்கியுள்ளார். வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர்கள் தொழில் நடத்துவது தொடர்பான திட்டத்தை உருவாக்குவது, ஏகபோக எதிர்ப்பு மற்றும் புதிய சுற்று பொருளாதாரச் சீர்திருத்தம் உள்ளிட்ட பயனுள்ள அறிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், Peking பல்கலைக்கழகம் உள்ளிட்ட சீனாவின் 5 பல்கலைக்கழகங்களில் பகுதி நேர பேராசிரியராக Wang Huiyao வேலை செய்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் திரட்டிய அனுபவங்களை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்கள் கூடிய விரைவில் திறமைசாலிகளாக வளர வேண்டும் என அவர் விரும்புகிறார். 1 2
|