• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-05 09:34:13    
Yao Jin Na அம்மையார்

cri
Jiang Xi மாநிலத்தின் Shang Rao நகரில், Yao Jin Na என்னும் 80 வயதான முதியோர் வாழ்கின்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுப்புறப் பண்பாட்டுத் துறையில் அவர் ஈடுபட்டுள்ளார். 500 நாட்டுப்புறப்பாடல்களை அவர் சேகரித்து, இயற்றி, பாடியுள்ளார். உள்ளூர் மக்களால் நேசிக்கப்படும் அவர், Shang Rao நகரில், "நாட்டுப்புறப்பாடல்களைப் பாடும் பாட்டி" என அழைக்கப்படுகிறார்.
Shang Rao நகரின் பழைய பாணி கட்டிடத்தில், Yao Jin Na அம்மையாரின் தனிச்சிறப்பு மிக்க பாட்டொலி கேட்கிறது. அவர் பாடும் பாடல்களில், உண்மையான சுவையும், சொந்த ஊர் மண்ணின் மணமும் நிரம்புகின்றன. இப்பாடல்களைக் கேட்பதில், ஒருவித இன்பமான உணர்வு ஏற்படும் என்று Yao Jin Na அம்மையாரின் அண்டைவீட்டுக்காரர்கள் கூறினர்.

"ஆசிரியர் Yao பாடும் பாடல்கள், நகைச்சுவையானவை என்றும், இப்பாடல்கள் தனக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தருகின்றன" என்றும் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் கூறினார்.
1929ஆம் ஆண்டு, Yao Jin Na அம்மையார், ஒரு நாட்டுப்புறக் கலைஞர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவர் நாட்டுப்புற இசை பண்பாட்டு சூழ்நிலையில் வளர்ந்தார். இதில், Chuan Tang Ban என்ற பழமைவாய்ந்த நாட்டுப்புற இசை நாடகம், அவரை பெரிதும் ஈர்த்து பாதித்தது. Chuan Tang Ban நாட்டுப்புற இசை நாடகம், Jiang Xi மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் பரவியுள்ளது. இது 500 ஆண்டுகள் வரலாறுடையது.

குழந்தைப் பருவத்தில், தனது தந்தை மற்றும் அண்ணனுடன் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று, Chuan Tang Banஐ அரங்கேற்றுவது, தம்மை பொறுத்த வரை மிக மகிழ்ச்சியான செயலாக இருந்தது என்று Yao Jin Na அம்மையார் கூறினார். "எனது தந்தையும் அண்ணனும், Chuan Tang Ban குழு உறுப்பினர்களே. அவர்களின் செல்வாக்கினால், நாட்டுப்புறப் பண்பாட்டை நேசிக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
Yao Jin Na அம்மையார் சில முறை நாட்டுப்புறப்பாடல்களைக் கேட்டல் போதும், அதை மனப்பாடம் செய்துவிட முடியும். அவர் பாடும் பாடல்களின் ராகம் மிகச் சரியானது. இதனால், அவர் அதிகப்படியான நாட்டுப்புறப் பாடல்களை நினைவில் வைத்து கொண்டுள்ளார். நாளுக்கு நாள், Shang Rao நாட்டுப்புறப் பாடல்களின் களஞ்சியம் மற்றும் வாழும் பண்பாட்டுச் சிதிலமாக அவர் மாறியுள்ளார்.
1 2