• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-05 09:34:13    
Yao Jin Na அம்மையார்

cri

1962ஆம் ஆண்டு, Jiang Xi மாநிலத்தின் முதலாவது இசை வாரம் என்ற விழாவில் கலந்து கொண்ட அவர், "மாடுகளை அழைக்கும் பாடல்"என்ற ஒரு Shang Rao நாட்டுப்புறப்பாடலை பாடி, முதல் பரிசு பெற்றார். விவசாயிகள் மாடுகளை அழைக்கும் காட்சிகள் அவரது பாடல் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இப்பாடல் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை ஒருசேர வென்றெடுத்தது. ஷாங்காய் இசைத் தட்டு நிறுவனம், அவர் பாடும் பாடல்களை இசைத் தட்டில் பதிவு செய்து, நாடு முழுவதிலும் பரவல் செய்தது. இதற்கு பின், புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடல் கலைஞராக அவர் மாறினார்.
சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பின், பாடல்களை இயற்றும் உற்சாகம் Yao Jin Na அம்மையாருக்கு அதிகமானது.
அவர் இயற்றும் பாடல்கள், காலத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளன. இப்பாடல்கள் மக்களால் வரவேற்கப்படுவதற்கு இது முக்கிய காரணமாகும். "செய்தி அறிவிப்பு" நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க விரும்புகின்றேன் என்றும், நான் பாடும் பாடல்களில், பெரும்பாலானவை என்னால் எழுதப்பட்டன" என்றும் அவர் கூறினார்.
நாள்தோறும் அவர் தொலைக்காட்சி செய்திகளைக் கண்டு ரசிக்கின்றார். நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது நாட்டுப்புறப்பாடல் நாடகங்களை அவர் அடிக்கடி தாமாக இயற்றி, அரங்கேற்றுகிறார்.

ஒரு ஊசி என்னும் பாடல், Yao Jin Na அம்மையார் தொழிலாளர்களுக்கென சிறப்பாக இயற்றிய பாடலாகும். Shang Rao நகரில் இது பரவலாக அறியப்படுகிறது. சிக்கனம் செய்வதில் உறுதியாக நிற்குமாறு தங்களது பிள்ளைகளுக்கு மக்கள் இப்பாடலின் மூலம் அறிவுரை கூறியுள்ளனர்.
கடந்த 80ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், வேளாண் துறை வளர்ச்சி, அவர் பாடல்களை இயற்றும் உற்சாகத்தை எழுப்பியது. Shang Rao வட்டார மொழியின் தனிச்சிறப்புக்கிணங்க, "காய்கறிகளை எடுப்பது" என்ற பாடலை இயற்றினார். இப்பாடலின் ராகம் மற்றும் வரிகளைக் கேட்டு, விவசாயிகள் கடின உழைப்பை மறந்து, அதிக அறுவடை தந்துள்ள மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
கடந்த 60 ஆண்டுகளில், நாட்டுப்புறப் பண்பாட்டின் களஞ்சியத்திலிருந்து சத்தான அம்சங்களை உட்புகுத்தி, 500 பாடல்களை அவர் இயற்றினார். இப்பாடல்களில் காலத்தின் நறுமணம் நிரம்பியிருக்கிறது.
2005ஆம் ஆண்டு, Yao Jin Na அம்மையார் நாட்டுப்புறக் கலைக் குழு ஒன்றை உருவாக்கினார். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், Yao Jin Na அம்மையாரும், 30க்கு அதிகமான குழு உறுப்பினர்களும், நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர் அல்லது பயிற்சி செய்கின்றனர். அவர்கள் Shang Rao நகரின் பொது மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

நீண்டகாலமாக கற்றுக்கொள்வதன் மூலம், தாம் பாடல் பாடும் நுட்பம் உயர்ந்துள்ளது என்றும், ஆசிரியர் Yao Jin Naவின் நிலையை எட்ட வேண்டுமெனில், தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் இக்கலைக் குழு உறுப்பினர் Hu Dong Lan கூறினார்.
Shang Rao நகரில் உள்ள பல பள்ளிகளின் அழைப்பை ஏற்று, Yao Jin Na அம்மையார் பாடத்திட்டத்தில் இல்லாத அம்சங்களின் ஆசிரியராக பதவி ஏற்றுள்ளார். அடுத்த தலைமுறையினருக்கு நாட்டுப்புறப் பாடல்களின் ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. Wang Ping என்னும் இளையோர் பள்ளி மாணவர் Yao Nin Na அம்மையார் பாடும் நாட்டுப்புறப் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். "மூதாட்டி Yao தாமாக இப்பாடல்களை இயற்றினார். பிற பிரதேசங்களில் இத்தகைய பாடல்கள் இல்லை. Shang Rao நாட்டுப்புறப் பாடல்கள் பிற பிரதேசங்களில் பரவ வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.
"நாட்டுப்புறப் பாடல்களை நேசிக்கின்றேன். நாட்டுப்புறப்பாடல்களைப் பாட விரும்புகின்றேன். முதியவராக இருந்த போதிலும், பாடல்களை தொடர்ந்து பாடுவேன். மேலதிக மக்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் புரிந்து கொண்டு, பாட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்" என்று Yao Nin Na அம்மையார் கூறினார்.
1 2