ஆயிரக்கணக்காண கிராமப்புற பேரங்காடிகளுக்கான திட்டப்பணியை அடுத்து, கிராமப்புறங்களுக்கு வீட்டுப்பயன்பாட்டு மின் சாதானங்களை அனுப்புவதென்ற திட்டப்பணியை, சீன நிதி அமைச்சகமும் வணிக அமைச்சகமும் மேற்கொண்டுள்ளன. வீட்டுப் பயன்பாட்டு மின் சாதனங்களை வாங்கும் விவசாயி ஒவ்வொருக்கும், விற்பனை விலையில் 13 விழுக்காட்டு மாணியத்தை நடுவண் மற்றும் பிரதேச அறசுகளின் நிதித் துறைகள் வழங்குகின்றன. ஓராண்டு சோதனைப் பணியை மேற்கொண்ட பின், இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள் முதல், இத்திட்டப்பணி மேற்கொள்ளப்படத் துவங்கியது. தொலைக்காட்சி, குளிர் சாதனப் பெட்டி முதலியவை இதில் அடங்குகின்றன.
கிராமப்புறங்களில் மாபெரும் உள்ளார்ந்த நுகர்வு ஆற்றல் உள்ளது. ஆனால், கிராமப்புறச் சந்தையை விரிவாக்குவதில், முதலில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, கிராமப்புற வளர்ச்சி என்னும் அரசின் முதலாவது இலக்க ஆவணம், இவ்வாண்டில் வெளியிடப்பட்டது. 2009ம் ஆண்டு, வேளாண் உற்பத்தியை நிதானப்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த ஆவணத்தில் சீன அரசு முன்வைத்துள்ளது.
தற்போது, உலக நிதி நெருக்கடியால் ஏற்றுமதி குறைந்து வருகிறது. பதனீட்டுத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியது. இது, நகரங்களில் வேலை செய்கின்ற மொத்த விவசாயத் தொழிலாளர்களில் 15 விழுக்காடு வகிக்கிறது. இனி, அவர்கள் வேலை பெறுவதற்கு உத்தரவாதம் செய்யுமாறு, மேலும், பல நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும். இந்த ஆவணம் குறித்து, மத்திய கமிட்டியின் கிராமப்புறப் பணிக் குழுவின் தலைவர் சாங் சி வென் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
முதலாவதாக, நகரங்கள் மற்றும் கடலோரப் பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள், பணியாளர்கள் அல்லது விவசாயத் தொழிலாளர்ககளை முடிந்தவரை பணி நீக்கம் செய்யாது. இரண்டாவதாக, தொழில் பயிற்சி வாய்ப்புக்களை விவசாயத் தொழிலாளருக்கு வழங்கும். மூன்றாவதாக, பொது அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில், இயன்ற அளவில் விவசாயத் தொழிலாளர்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நான்காவதாக, சொந்த தொழில் நிறுவனங்களை விவசாயிகள் நடத்த அரசு உதவி செய்யும் என்று அவர் கூறினார்.
1 2 3
|