• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-08 17:34:54    
கிராமப்புறச் சந்தைகள்

cri

மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க சீனா உதவி செய்து வருகிறது. மிகத் தாழ்ந்த தானிய கொள்வனவு விலையை தொடர்ந்து உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

அதேவேளையில், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் பலர் நன்மைகளை பெறுகின்றனர். இணைய தளத்தை பயன்படுத்துவதன் மூலம், விற்பனை தகவல்களைத் திரட்டி, சர்வதேசச் சந்தையின் நிலைமையை விவசாயிகள் புரிந்துகொள்கின்றனர். அரிசி, மூலிகை மருந்து முதலிய வேளாண் உற்பத்திப் பொருட்களை, தென் கொரியா, ஜப்பான், ரஷியா ஆகிய நாடுகளுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்கின்றனர். 2008ம் ஆண்டு, இணைய தளத்தின் மூலம், 10 கோடி யுவான் மதிப்புள்ள வேளாண் உற்பத்திப் பொருட்களை அவர்கள் விற்பனை செய்தனர். இது குறித்து, சொ துங் செ என்னும் விவசாயி கூறியதாவது:

2009ம் ஆண்டு, இணைய தளம் என்ற வடிவத்தின் மூலம், தொடர்புடைய வணிக நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். வர்த்தகத் தொகை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று அவர் கூறினார்.

நுகர்வை விரிவாக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. கிராமப்புறங்களிலான கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட சமூகக் காப்புறுதி அமைப்புமுறையை மேம்படுத்தி வருகிறது. சீனாவின் உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் பணியில் கிராமப்புற நுகர்வுச் சந்தை முக்கிய பங்காற்றும் என்று நிபுணர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.


1 2 3