• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-09 17:05:36    
விளைபயிர்களில் புழுப்பூச்சிகள் எதிர்ப்பு

cri

பயிர்களில் புழுப்பூச்சிகள் விழுவது விவசாயிகள் எதிர்கொள்ளும் அறைகூவலகளில் மிக முக்கியமானது. அவற்றால் பயிர்கள் அழிவதோடு உற்பத்தியளவு குறைந்து, உற்பத்தியாகும் கொஞ்சநஞ்ச பொருட்களின் தரமும் பாதிக்கப்படுகிறது. உயிர்வள மற்றும் வேதியல் எருக்களை பயன்படுத்தினாலும் இந்த புழுப்பூச்சிகள் பயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பதில்லை. புழுப்பூச்சிகளால் பாதிக்கப்படாத பயிர்கள் தோன்றிவிட்டால் வேளாண்துறை நாம் எதிர்பார்க்காத அளவுக்கு மறுமலர்ச்சி பெறும். செயற்கையாக தயாரிக்கப்படும் வேதியல் உரங்களை பயன்படுத்தாமல் விளைச்சல் பெறும்நிலை உருவானால், அது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்த பொருட்களை உற்பத்தி செய்ய உதவும்.

எனவே விளைபயிர்களில் பூச்சிகளின் பாதிப்புகளை அதிகளவில் குறைப்பதற்கான வழிமுறைகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் BT பயிர்கள். அதாவது பயிர்களை தாக்குகின்ற புழுப்பூச்சிகளை எதிர்க்கின்ற நுண்ணுயிரிகளை கொண்டிருக்கும் பயிர்கள். இத்தகைய வேளாண் அறிவியல் தொழில் நுட்பம் 1960 ஆம் ஆண்டிலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. BT பயிர்களை கொண்டு பயிர்களில் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை மாபெரும் அளவு குறைக்கமுடியும். இவ்வாறு செய்வதால் எதிர்கால அறுவடையில் அதிக விளைச்சலை பெறமுடியும் என்பதை சீன ஆய்வாளர் குழுவொன்று வெளியிட்ட தங்கள் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் வெளிவந்த சீன வேளாண் அறிவியல் கழக இதழில் Wu Kongming குழுவினரால் பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பாசில்லஸ் துரிஞ்ஜியன்சிஸ் (Bacillus Thuringiensis) என்பது ஒரு மண்வகை நுண்ணுயிரி. மனிதர்கள், விலங்குகள், மீன்கள், தாவரங்கள், சிறு உயிரினங்கள் மற்றும் பல பூச்சிகளுக்கு இது தீங்கீழைக்காது. ஆனால் பயிர்களைத் தாக்கும் புழுப்பூச்சிகள் செயலற்றுப் போக வைக்கும் நச்சுத்தன்மையை இது கொண்டுள்ளது. பயிரிடப்படும் பயிர்கள் விளைந்த பின்னர் மண்ணில் காணப்படும் அதன் நச்சுத்தன்மை விரைவாக மறைந்து போவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதில்லை. இந்த நுண்ணுயிரி மரபணுரீதியாக சேர்க்கப்படுகின்ற பயிர்கள் BT பயிர்கள் எனப்படுகின்றன.

BT பருத்தி பயிரில் மேற்கொள்ளப்பட்ட இந்த உயிரித் தொழில்நுட்ப (Bio-Technology) முறை தான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளபட்டது. பருத்திச் செடியின் மரபுக்கூறுகளில் ஒரு செடி வளரும் போது அதன் உடல் முழுவதும் இந்த நுண்ணுயிரி உருவாகும் வகையில் அறிவியலாளர்கள் அமைக்கிறார்கள். பருத்திச் செடியைத் தாக்கும் பூச்சிகளில் போல் புழுக்கள் (bollworm) மிக முக்கியமானது. சோளம், தக்காளி, பருத்தி ஆகியவற்றில் தங்கள் கைவரிசையை காட்டும் இந்த போல் புழு உலகளவில் மிகவும் பரவலாக பயிர்களை பாதிக்கின்றது. ஆண்டொன்றுக்கு ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை உலகில் இது ஏற்படுத்தி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பூச்சியை BT பயிர்களை தவிர்த்து, வேறுறேந்த இரசாயன பூச்சிக்கொல்லி மருத்துகளாலும் அழிக்க முடியவில்லை. இதனால் BT பயிர்களால் பருத்தி விளைச்சல் அமோகமாக வளர்ந்தது. இந்த நுண்ணுயிர்களை மரபணுவில் கொண்ட பருத்தி பயிர்கள் இப்போது மிகவும் பிரபலம். இதனை Bt பருத்தி என்று அழைக்கிறார்கள்.

1997 ஆம் ஆண்டிலிருந்து Bt பருத்தி பயிர்களை சீனா வணிகரீதியில் பயன்படுத்த தொடங்கியது. சீனாவின் வட மாநிலங்களான Shandong, Hebei, Henan, Jiangsu, Anhui மற்றும் Shaanxi என ஆறு மாநிலங்களில் Bt பருத்தி பயிர்கள் பயிரிடப்பட்டன. இம்மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட 1997 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான தரவுகளை Wu Kongming குழுவினர் ஆய்வு செய்தனர். ஒரு கோடி விவசாயிகளால் பயிரிடப்பட்ட 38 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. சீன விவசாயிகளுக்கு மிக பெரிய சவாலாக விளங்கிய பருத்தி "போல்புழு"க்களின் மீது தனிக்கவனம் செலுத்தி, கொடுக்கப்பட்ட தரவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

1 2