• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-09 17:05:36    
விளைபயிர்களில் புழுப்பூச்சிகள் எதிர்ப்பு

cri

அதில், BT பருத்தி பயிர்கள் பயன்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் போல் புழுக்களின் பாதிப்பு அதிகளவு குறைந்திருந்ததை Wu Kongming குழுவினர் கண்டுபிடித்தனர். குறிப்பாக 2002 முதல் 2006 வரையான ஆண்டுகளில் போல் புழுக்களின் பாதிப்பு மாபெரும் அளவு குறைந்திருந்தது. BT பருத்தி பயிர்கள் அறிமுகப்படுத்திய பகுதிகளில் நிலவிய தட்பவெப்பம் மற்றும் மழையளவு அனைத்தையும் கணக்கிட்டபோது BT பருத்தி பயிர்கள் தான் நீண்டகால அளவில் பூச்சிகள் குறைவதற்கு காரணமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பருத்தி, போல் புழுக்களுக்கு மிகவும் விருப்பமான பயிர். எனவே பயிரின் பூவிலும், இலைகளிலும் முட்டைகளை இடுகின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் BT நுண்ணுயிரியின் நச்சுத்தன்மையால் கொல்லப்படும் என்பதை அவை அறியாதிருக்கின்றன. இதுபோல BT பயிர்களை கொண்டு, பத்தாண்டுகளுக்கு பிறகு இதர விளைபயிர்களிலான புழுப்பூச்சிகளின் கட்டுப்பாட்டையும் மிக நன்றாகவே மேற்கொள்ள முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

BT பயிர்கள் வேளாண் அறிவியல் நுட்பம், விளைபயிர்களை பாதிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய கருவியாக பார்க்கப்படுவதாகவும் அதனை பயன்படுத்திய எல்லா விவசாயிகளும் பயன்பெற்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெற்றிகரமான இந்த நடைமுறையாக்கம் சீனா முழுவதும் வேளாண் துறையில் புதிய மறுமலர்ச்சியை கொண்டுவர இருக்கிறது. தானிய நெருக்கடியை உலகு சந்தித்து கொண்டிருக்கின்ற போது மனித குலத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்யும் வேளாண் அறிவியல் நுட்பங்கள் காலத்தின் கட்டாயமே.


1 2