• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-09 15:06:53    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை நவ சீனா உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. வைர விழா காலத்தில் இருக்கின்றோம். இந்த 60 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களை நேயர்களுக்கு அறிவிக்கும் விதமாக நவ சீனாவின் வைரவிழா பொது அறிவு போட்டியை சீன வானொலி நிலையம் நடத்துகிறது. இப்போட்டி ஜூன் முதல் நாள் அதிகாரபூர்வமாக துவங்கியும் விட்டது.
தமிழன்பன் இப்பொது அறிவுப் போட்டியில், வளம் அடைவது, ஓரளவு வசதியான வாழ்க்கை தரம், உலகை நோக்கி, சட்டப்படி நிர்வாகம், விண்வெளி ஆய்வு ஆகிய தலைப்புகளில் 5 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவற்றிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு கடிதம் மூலமோ, இணையதளம் மூலமோ விடையளிக்கலாம்.
கலை உங்கள் பதில்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் செம்டம்பர் முதல் நாள். கடிதங்கள், இணையதளம் மூலம் விடைகளை உடனடியாக அனுப்புங்கள். மதிப்புமிக்க பரிசுகளை தட்டிச் செல்லுங்கள். சிறப்பு பரிசு பெறும் நேயர் ஒருவர் சீனாவில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெறுவார்.


தமிழன்பன் இனி நிகழ்ச்சிக்கு செல்வோம்.
கலை நிகழ்ச்சியின் முதலாவதாக ஊட்டி ஆர். திவ்யா சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்நிகழ்ச்சிகளின் உள்ளடக்கங்கள், சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணிகள் நடைமுறைக்கு வந்த பின்பு ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை விளக்குவதாக அமைகிறது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு கொண்டுவந்த விளைவுகள் சீனாவில் ஏற்பட்ட பன்முக மாற்றங்களுக்கு திருப்புமுனையாக அமைந்ததை இந்நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
தமிழன்பன் இலங்கை தூத்துவிலிருந்து ஜே. ஷாஜஹான் அனுப்பிய கடிதம். தமிழ் மூலம் சீனம், சீன தமிழொலி என்ற இரண்டு நூல்களும் கிடைத்தன. சீன தமிழொலியில் பதிவான "புவியில் சொர்க்கம்" என்ற கட்டுரையில் சீனாவின் தற்போதைய செல்வங்களாக உள்ள ஏரிகளும், வண்ண வண்ண பூஞ்சோலைகளும் பூத்து குலுங்கும் வண்ண மரங்களும், நிறைந்த அழகை எனது மனக்கண்ணில் படம் போல் விரிய செய்தது. இப்பகுதிகளின் அழகு இலங்கையின் அழகான பகுதிகளை விட பல மடங்கு மேலானதாய் அமைந்திருப்பதையும் என்னால் உணர முடிந்தது. யுனஸ்கோ உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு இயற்கை வளம் கொழிக்கும் சீனா அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்துள்ள அவர் தமிழால் சீனப்புகழ் பரவுவதை சிறு கவிதையாக வடித்துள்ளார்.


செந்தமிழ் எங்கும் இருக்குது பார்
சீனத்துச் சிட்டுக்கள் பரப்புது பார்
சீனத்து செல்வங்களும் பரவுது பார்.
கலை அடுத்தாக கே.கே.போஜன் புகையிலை தடுப்பு குறித்து எழுதிய கடிதம். புகையிலை தடுப்பு, புகை நமக்கு வேண்டாம் என்று கூறி அதனை தடைசெய்ய இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் நல்லவையே. ஆனால் புகையிலை தொழிலை நம்பி வாழும் மக்களுக்கு மாற்று வழிகள் காட்டப்படும் வரை இந்த முயற்சிகள் முழு வெற்றியடைவது ஐயமே. சீன இளைஞர்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் குறைந்து வருவது எதிர்கால பொறுப்புமிக்க இளைஞர் சமூக எழுச்சியின் வெளிப்பாடாக தெரிகிறது.
தமிழன்பன் தொடர்வது, சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி உடலிலுள்ள கொழுப்பு சத்தை கரைக்க இசை பயன்படுவது பற்றிய தகவல்கள் சிலவற்றை எழுதி அனுப்பியுள்ளார். உடலிலுள்ள கொழுப்பு சத்தை கரைக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் இசையை விரும்பி கேட்பது பயன்தரும். இதய நோயாளிகள் தங்களுக்கு விரும்பிய இசையை அரை மணிநேரம் நாள்தோறும் கேட்டால் மன அமைதி ஏற்பட்டு உடல் நலமும் ஏற்படும். இசையை இரசிப்பதால், இரத்த நாளங்கள் விரிவடைந்து சுத்தமாகி, உடல் கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாம். இதை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு சோதனை செய்து வெற்றியும் பெற்றுள்ளனர். 18 ஆம் நூற்றாண்டு சிம்பொனி இசை உளநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கிறார்கள்.
கலை திமிறி எஸ். ஆதித்தியன் மக்கள் சீனம் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்ற கட்டுரையை கேட்டேன். நிதி நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்புகளால் உருவான வேலைவாய்ப்பில்லா நிலையை குறைத்து, புதிதாக பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றுவரும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கான முன்னேற்பாடுகளையும் சீன அரசு மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. ஓராண்டுக்கு முன்பே வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் சீனர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க மேற்கொள்ளப்படும் அயரா உழைப்பு என்று பாராட்ட வேண்டியுள்ளது.


தமிழன்பன் அடுத்தாக, வேலூர் கு. ராமமூர்த்தி செய்தித் தொகுப்பு பற்றி எழுதிய கடிதம். சீன தலைமையமைச்சர் பிரிட்டன் தலைமையமைச்சரை சந்தித்தது குறித்து ஒலிபரப்பரப்பப்பட்டது. சீனா உள்நாட்டு நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதத்தை சீன தலைமையமைச்சர் விளக்கி எடுத்துக்கூறியது அருமை. சீன விவசாயிகளின் வருமான உயர்வு, உணவு தானிய விளைச்சலை அதிகப்படுத்த சீனா எடுக்கும் முயற்சிகளும் வரவேற்கதக்கவை.
கலை தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து கடிதம் எழுதியுள்ள சுமய்யா சீன வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு புதிய இலக்குகளோடு வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு
வையகம் எங்கும் வசந்தம் வீசும்
அழகிய, அற்புத சீன வானொலி
வண்ணத்திற்கினிய நிகழ்ச்சிகளால்
மனதை பறிக்கின்றாய்
வேறு நாடுகளில் உள்ள எங்களுக்கு
சீனாவை அறிமுகப்படுத்துகின்றாய்
வானொலி அலைவரிசை மூலம்
பல தகவல்களை செவிக்குணவாக்குகிறாய்
என்று பாராட்டி எழுதியுள்ளார்.

1 2