தமிழன்பன் சென்னை எஸ். ரேணுகாதேவி சீனப் பண்பாடு பற்றி அனுப்பிய கடிதம். ஒரு நாட்டின் பண்பாடு தான் அதன் பெருமையை பறைசாற்ற செய்கின்றது. சீனாவின் செந்நிறத்தை கௌவிக்கும் வகையில் அமைந்த இக்கட்டுரை தகவல்களை தந்து அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சிவப்பு நிறம் ஆபத்து, அபாயத்தை குறிக்கிறது. ஆனால் சீனாவில் இதற்கு எதிர்மறை சிந்தனை. சிவப்பு வண்ண அலங்காரங்களோடு, புத்தாண்டு வசந்த விழாவை கொண்டாடினால் நன்மை விளையும் என்று சீனர்கள் நம்புகின்றனர். வாழ்த்து அட்டைகள், பண உறைகள், குழந்தைகளின் இடுப்பிலுள்ள அரைஞாண் அனைத்தும் செந்தூரம் என்று அட்டகாசமாக கவிதை போன்று இக்கட்டுரை இசை பாடியது என்னலாம்.
மின்னஞ்சல் பகுதி முணுகப்பட்டு பி கண்ணன் சேகர் சீனாவின் சி்ச்சுவானில், மே 28 ஆம் நாள் பயணம் மேற்கொண்டபோது, உலக தேயிலை பண்பாட்டு அருங்காட்சியத்தை கண்டுகளித்த அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். பிரமாண்டமான அந்த அருங்காட்சியகம் சீன நாட்டின் தேயிலை உற்பத்தி வளர்ச்சியின் வரலாற்றை விளக்குவதோடு, உலக நாடுகளின் தேயிலை பயன்பாடு, வரலாறு, மற்றும் வளர்ச்சியை பறைசாற்றும் சர்வதேச தளமாக இருக்கிறது. அங்குள்ள இந்திய தேயிலை பயன்பாட்டு வளர்ச்சி பற்றிய தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. தமிழ் நாட்டின் நீலகிரி தேயிலை உற்பத்தி பற்றிய செய்திகள் கொஞ்சம் விரிவாகவே அங்கு இருந்தன. அதேபோல இந்திய டீக்கடையின் அமைப்பின் மாதிரி ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டு உலக தேயிலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்துள்ளதை அங்குள்ள சான்றுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேயிலை கண்டுபிடிப்பு, தேனீர் பயன்பாட்டு பாத்திரங்கள், தேயிலை பற்றிய அறிஞர்களின் விளக்க நூல்கள், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, முற்காலத்தில், சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் தேயிலை பொதிகளை தொழிலாளர்கள் சுமந்து வணிகம் செய்ததை காட்சிகள் வடிவில் தத்ரூபமாக செய்து வைத்துள்ளனர். மன்னராட்சி காலத்தில் தேனீரை வசதி படைத்த கோமான்கள் மட்டுமே பருகுவதாக இருந்து வந்துள்ளது.
அன்றைய நிலை முற்றிலும் மாறி, இன்று தேனீர் சீனாவின் அனைத்து மக்களின் வாழ்விலும் பிரிக்க முடியாத பகுதியாக வளர்ச்சி கண்டுள்ளது. மலைப்பகுதியில் சுமார் 2000 மீட்டர் உயரத்திலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு மின்சார கூடை வண்டியில் சென்றடைந்தோம். அங்கு 300 வருட தேயிலை மரமொன்று இருப்பதை பார்த்து வியப்படைந்தோம். தேயிலை வரலாற்றில் சீனா தனக்கான தனிசிறப்பை நிலைநிறுத்தி இருப்பது அத்துறையில் அதன் வளர்ச்சியை காட்டுகிறது. முணுகப்பட்டு பி. கண்ணன் சேகர் அவர்களின் சீனப்பயணம் வெற்றிபெற வேண்டும் என்று மீனாட்சிபாளையம் , கா. அருண் மற்றும் கா .அனிதா, பெருந்துறை சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாகவும், இந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாகவும் பல்லவி கே. பரமசிவன், முத்து சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாக பேளுக்குறிச்சி கே. செந்தில் ஆகிளோர் மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் சீன மக்கள் டிராகன் படகுவிழாவை மே 28 ஆம் நாள் பல்வகை வடிவங்களில் கொண்டாடினர் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். பழமை மாறாமல், பாரம்பரிய வடிவில் பல்வேறு விழாக்களை உயிராற்றலுடன் சீன மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விழாக்களை கொண்டாடுவதில் சீனர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் அதிகம். காலம்கடந்தாலும், டிராகன் படகு விழா நல்வாழ்த்துக்களை அனைத்து சீன மக்களுக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில், 2,985 மட்டுமே மக்கள் தொகை கொண்ட லோபா இன மக்கள் தொடர்பான பண்பாட்டு விழா ஒன்று திபெத்தின் நிங்சு பகுதியில் துவங்கியதை அறிந்தேன். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இவ்வின மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து கட்டிக்காக்க இவ்வடிவிலான விழாக்கள் பெரிதும் உதவக்கூடும்.
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்குவகிப்பதில் உள்நாட்டு பொருளாதார காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் பெய்ஜிங்கில் தலைமையங்களை நிறுவுவதை ஊக்குவிக்கும் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், பெய்ஜிங்கில் தலைமையகங்களை நிறுவுவதற்கு பல கட்டுப்பாட்டுக்களை தளர்த்தி நல்ல சூழலை சீன அரசு ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமாக சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் தொடர்ந்து வெற்றிநடை போடும் என்பதில் ஐயமில்லை. இதன்மூலமாக ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டுகாரணிகளோடு வெளிநாட்டு நிறுவனங்களின் காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை செய்தித்தொகுப்பு உணர்த்தியது.
வளவனூர், முத்துசிவக்குமரன் சீன இந்திய கருத்தரங்கு மே திங்கள் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ளது. சீன இந்திய உறவில், தகவல், பண்பாடு, கல்வி, நிதி ஆகியவிற்றில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைத்து, ஒன்றிடம் இல்லாததை, மற்றொன்று நிரப்பிட வ்ழிவகைகள் இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இது போன்ற கருத்தரங்குகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் செம்மைப்படுத்தும்.
1 2
|