• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-11 11:07:33    
முன்பிருந்தபடியே மீட்டப்பட்ட தொடர் வண்டி நிலையம்

cri

கடந்த ஆண்டின் மே திங்களில் சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி சீனாவின் இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி வினாவித்தார். அவருடைய கேள்வியின் படி நாங்கள் நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கி சீனாவின் இருப்புப் பாதையின் வளர்ச்சி பற்றி விவரித்தோம். திரு ச்சென் தியன் யூ என்பவர் 100க்கு மேலான ஆண்டுகளுக்கு முன் சீனாவின் இருப்பு பாதை கட்டியமைப்பதில் மூத்தவராக அழைக்கப்பட்டார்.

1905ம் ஆண்டு அவர் சீனாவின் முதலாவது இருப்புப் பாதை திட்டத்தை வடிவமைப்புச் செய்தவராவார். அந்த இருப்புப் பாதை சீனாவின் பெய்சிங் புறநகரிலுள்ள பாட்டாலின் பெருஞ் சுவரின் மலையடிவாரத்தில் கட்டியமைக்கப்பட்டது. இது சீனாவின் இருப்புப் பாதையின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் சாட்சியாக கருதப்படுகின்றது. இதுவரை இந்த இருப்புப் பாதை தொடர்ந்து போக்குவரத்துக் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. இது பெய்ஜிங்கிலிருந்து ஹோ பேய் மாநிலத்தின் சான் சியா கௌ நகருக்குச் செல்லும் இருப்புப் பாதையாகும். முனைவர் ச்சென் தியன் யூயை நினைவு கூரும் வகையில் சிங் லுன் சியௌ என்னும் தொடர் வண்டி நிலையம் 100க்கு மேலான ஆண்டுகளுக்கு முன்பு கட்டியமைக்கப்பட்ட அதே நிலைமையில் இன்றும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஓராண்டுக்கு முந்தைய எமது நிகழ்ச்சியின் மூலம் சீனாவின் இருப்புப் பாதை வரலாற்றை அறிமுகப்படுத்தும் போது உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

100க்கும் மேலான ஆண்டு கால வரலாறு கொண்ட பழைய தொடர் வண்டி நிலையத்தின் மீட்பு எப்படி.?இது பற்றி நாங்கள் இன்று முக்கியமாக அறிமுகப்படுத்துகின்றோம்.

104 ஆண்டுகால வரலாறு கொண்ட சிங் லுன் சியௌ தொடர் வண்டி நிலையத்தை செப்பனிடும் பணி ஜுலை திங்களில் நிறைவேறும். செப்பனிடப்பட்ட பழைய தொடர் வண்டி நிலையத்தில் சீனத் தொழிலாளர்களை நினைவுகூரும் தூண் ஒன்று நிலையத்தின் மேற்கில் கட்டியமைக்கப்பட்டது. இருப்புப் பாதையின் பக்கத்தில் நிற்கின்ற இந்த நினைவு தூண்யின் உயரம் ஒரு மீட்டராகும். அதன் எதிரே பெருஞ்சுவர் அமைந்துள்ளது. நினைவு தூண் சாம்பல் நிறமாக காணப்படுகின்றது. நினைவு தூணின் முன் பக்கத்தில் பெருஞ்சுவர் மற்றும் பெய்ஜிங் சான் சியா கௌ இருப்புப் பாதை இணையும் சிங் லுன் சியௌ கிளையின் சந்திப்பு என்ற சொற்கள் செதுக்கப்பட்டன. அதன் பின் பக்கத்தில் சீனாவில் தற்சார்ப்பாக கட்டியைமைக்கப்பட்ட முதலாவது இருப்புப் பாதை பெய்ஜிங் சாங் சியா கௌ இருப்புப் பாதை என்ற சொற்கள் செதுக்கப்பட்டன. இந்த சிறிய நினைவு தூண் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தது. நினைவு தூணின் உச்சி பகுதியின் சாய்மானம் ஆயிரத்துக்கு 33. இது பெய்ஜிங் ச்சான் சியா கௌ இருப்புப் பாதையின் சிங் லுன் சியௌ பகுதியின் சாய்மானத்துக்கு ஒத்தது. இரண்டு காரை தூண்களால் இணைக்கப்பட்ட இருப்புப் பாதை வடிவத்தில் அமைந்த நினைவு தூணின் தோற்றம் சீனத் தொழிலாளர் என்று பொருள்படுகின்றது. ஆகவே சிங் லுன் சியௌ தொடர் வண்டி நிலையம் சீனாவையும் பெய்ஜிங்கின் பழைய தொழில் துறையையும் அடையாளப்படுத்துகின்றது.

1 2