அடுத்து, செப்பனிடப்பட்ட தொடர் வண்டி நிலைய்தின் நிறம் சிவப்பு சாம்பல் மற்றும் பச்சையென மூன்று நிறங்களாக உறுதிப்படுத்தப்பட்டது. சீனா மற்றும் மேலை நாட்டுக் கட்டட பாணி இணைந்த தனிச்சிறப்பியல்பு இந்த தொடர் வண்டி நிலையத்தில் காணப்படுகின்றது. நிலையத்தின் உச்சி அப்போதைய கட்டட நிழற்படத்தின் படி "கைப்பிடிச்சுவர்" வடிவத்தில் மீட்கப்பட்டது. செப்பனிடப்பட்ட தொடர் வண்டி நிலையம் முன்பிருந்ததை விட பெரிதாகியுள்ளது. முன்பிருந்த பெண் ஆண் என்ற தனிப்பட்ட அறைகள் மீட்கப்பட்டன. பழைய சீனாவில் பெண்களும் ஆண்களும் ஒரே இடத்தில் தொடர் வண்டிக்காக காத்திருக்கக் கூடாது. ஆகவே செப்பனிடப்பட்ட நிலையத்தில் இந்த வரலாறு கவனிக்கப்பட்டுள்ளது. கவனிக்கப்படத் தக்க வரலாற்றுச் சின்னங்கள் இந்த செப்பனிடும் பணியில் கவனிக்கப்பட்டன. தவிரவும். நிலையத்தில் கையால் இருப்புப் பாதையின் இலக்கை மாற்றும் கருவி, இருப்புப் பாதையின் பழையப் பகுதி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தவிரவும் நிலையத்தின் மாற்றம் பற்றி எழுத்துக்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மேலும் பல பழைய பொருட்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பெய்ஜிங்கின் முற்கால தொழிற்துறையின் பண்பாட்டுப் பொருட்களை பாதுகாப்பது பற்றி கற்றுக் கொள்வதற்கு இந்தப் பொருட்களும் சிங் லுன் சியௌ தொடர் வண்டி நிலையத்தின் செப்பனிடுதலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெய்ஜிங்கில் பல பழைய தொழிற்துறை சிதிலங்கள் உள்ளன. வரலாற்று கண்ணோட்டத்தில் பார்த்தால் அவை வரலாற்று அரங்கிலிருந்து வெளியேறலாம். ஆனால் அவற்றின் சமூகப் பங்கு தொடர்ந்து வெளிக்கொணரப்படும். எடுத்துக்காட்டாக சிங் லுன் சியௌ தொடர் வண்டி நிலையம் மூலம் சீனாவின் தொழிற்துறையின் வரலாற்றை குறித்து மக்களுக்கு மேலும் கூடுதலாக அறிமுகப்படுத்தலாம். சமூகத்தின் மூலவளத்திற்கு ஒரு சேமிப்பாகவும் மறு பயன்பாடாகவும் இம்முயற்சி கருதப்படுகிறது. 1 2
|