• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-11 12:44:55    
வாகனம் வாங்க சலுகை

cri
வாகனம் வாங்க சலுகை

எரியாற்றல் சிக்கனப்படுத்துகின்ற சீருந்துகளை 13 நகரங்களில் பரவலாக்க சீனா சலுகை வழங்கும் கொள்கைளை வெளியிட்டுள்ளது. மின்சார, எரிம கலன் மற்றும் கலப்பு எரியாற்றல்களை கொண்ட சீருந்துகளை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் பரவலாக்க அவற்றை வாங்குவோருக்கு நிதி சலுகை வழங்கப்படுமென நிதி அமைச்சகமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன. பொது போக்குவரத்து, வாடகை சீருந்து நிறுவனங்கள், தபால் சேவைகள் மற்றும் பொதுத் துறை அலுவலகங்கள் எரியாற்றல் சிக்கனப்படுத்துகின்ற வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிக தொகை சலுகையாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரியாற்றல் சிக்கனப்படுத்துகின்ற சீருந்துகளுக்கு உள்ளூர் அரசுகளும் சலுகை வழங்க நடுவண் அரசு வலியுறுத்தியுள்ளது. தனி நபர்களுக்கும் சலுகை வழங்கப்படுவதால் இத்தகைய வாகனங்களை பரவல் செய்யவும், அதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசு எடுக்கின்ற மிக பெரிய முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது. இந்த வாகனங்களின் விலை மிகவும் உயர்வாக இருப்பதால் அவை அதிகமாக வாங்கப்படவி்ல்லை. சலுகைகள் மூலம் விலைகள் குறையும் என்பதால் பலர் வாங்க முன்வருவர்.

1 2