• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-11 12:44:55    
வாகனம் வாங்க சலுகை

cri

தொடர் முயற்சி

தென் கொரியாவை சேர்ந்த 68 வயதான பெண்ணொருவர் ஓட்டுநர் தேர்வில் 771 முறை தோல்வியடைந்துள்ள போதிலும் இன்னும் அடுத்தமுறை தேர்வு எழுத போவதாக தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய எல்லா வேலை நாட்களிலும் தென் கொரியாவின் தென் மேற்கு நகரான Jeonju வில் அவர் ஓட்டுநர் தேர்வு எழுதியுள்ளார். அத்தேர்வை மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரி அந்நகரின் Deokjingu மாவட்டத்தில் இவரே அதிக முறை ஓட்டுநர் தேர்வு எழுதிய நபர் என்று தெரிவித்தார். கையால் இழுக்கப்படுகின்ற வண்டி மூலம் உணவு மற்றும் வீட்டுப்பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் Cha என்பவர் தான் இவ்வாறு தொடர்ந்து முயன்று கொண்டிருப்பவர். தனது வியாபாராத்தை வளர்க்க சீருந்து வாங்க விரும்பியே ஓட்டுநர் தேர்வு எழுதிகொண்டிருக்கிறார். ஒரு தேர்வுக்கு 6000 ஒன் கட்டணம் செலுத்தி எழுதுகின்ற அவர் இதுவரை ஐந்து மில்லியன் ஒன் அதாவது 3,600 அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளார். தோல்விகளால் துவளாமல் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கும் இந்த பெண்மணி விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு.


1 2