• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-12 18:26:52    
மதிப்புள்ள திபெத் தொல் பொருட்கள்

cri

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பல மதிப்புள்ள வரலாற்று தொல் பொருட்களும் பண்டைக்கால கட்டிடங்களும் உள்ளன. திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ள 50 ஆண்டுகளில், தொல் பொருட்களைப் பாதுகாத்து சீரமைத்து பராமரிக்க சீன அரசு, தொடர்ந்து நிதியை ஒதுக்கி வருகின்றது. போத்தலா மாளிகை, திபெத் தேசிய இனக் கட்டிடக் கலைப்பாணியின் முக்கிய கட்டிடமாகும். அது, திபெத் தேசிய இனக் கலையின் கருவூலமுமாகும். அது, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு முதல் போத்தலா மாளிகையின் சீரமைப்பு திட்டத்திற்கென சீன அரசு 15 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள தொல் பொருட்களை மேலும் நன்கு பாதுகாத்து, பராமரிக்கும் வகையில், 2002ம் ஆண்டு, போத்தலா மாளிகை, Norbolingka, Sakya துறவிகள் மடம் ஆகிய முக்கிய பண்டைய கட்டிடங்களின் சீரமைப்பில் சீன அரசு 33 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, இத்திட்டம், திபெத்தில் மிகப் பெருமளவிலான தொல் பொருள் சீரமைப்பு திட்டமாகும். நடுவண், போத்தலா மாளிகையைப் பராமரித்து வருகின்றது. இது வரை, போத்தலா மாளிகையின் முக்கிய பண்டைய கட்டிட்பகுதியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது, சிவப்பு மாளிகை, வெள்ளை மாளிகை முதலிய 17 பண்டைய கட்டிடங்களின் சீரமைப்பு, ஆகியவை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று போத்தலா மாளிகையின் நிர்வாக ஆணையத்தின் தலைவர் qiang ba ge sang கூறினார். அவர் மேலும் கூறியதாவது

1989ம் முதல் 1994ம் ஆண்டு வரை, போத்தலா மாளிகையின் முதலாவது சீரமைப்பில், நடுவண் அரசு, 5 கோடியே 30 இலட்சம் யுவானை ஒதுக்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது சீரமைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. 2002ம் ஆண்டு, நடுவண் அரசு, 17 கோடி யுவானை ஒதுக்கியது. அப்போது முதல், போத்தலா மாளிகை செப்பனிடப்பட்டு வருகின்றது.

நெடிய வரலாற்று காலத்தில், திபெத் மக்கள், அவர்களது அயராத உழைப்பு மற்றும் அறிவுத்திறனுடன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டை உருவாக்கியுள்ளனர். சீன நாகரிகங்கத்தின் ஒரு பகுதியாக, திபெத் பண்பாட்டு மரபுச் செல்வ மூல வளம், செழிப்பாக இருக்கின்றது. போத்தலா மாளிகை, Norbolingka, Luobulin கோட்டை ஆகியவை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 35 தொல் பொருட்கள், நாட்டின் முக்கிய தொல் பொருள் பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

1 2 3