• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-16 10:25:17    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை பற்றி உங்களது கடிதங்கள் தாங்கிவந்த சீரிய கருத்துக்களை தொகுத்து அனைவரும் அறிய வழங்குகின்றோம்.
திருச்சி அண்ணாநகரிலிருந்து உதய குமார் ஒலியை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
கலை அடுத்து இராம பாளையம் இரா. கேசவன் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் என்ற நிகழ்ச்சியை செவிமடுத்தேன். இது எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ஒன்றாகும். இளைஞர்களின் வாழ்வை வளமாக்க உதவும் இந்த அரிய செயலை முன்னெடுத்துவரும் சீன அரசின் தீவிரமான முயற்சிகளையும் அறியதந்தீர்கள். நிதிநெருக்கடியால் உலக நாடுகள் பல பொருளாதார அளவில் பாதிப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் சீனாவில் ஏற்படும் எதிர்கால பாதிப்புகளை தடுக்கும் என்று நம்புகிறோம்.
தமிழன்பன் செய்தித்தொகுப்பு பற்றி விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் எழுதிய கடிதம். இந்திய சீன உறவின் வளர்ச்சி குறிந்த கட்டுரையை கேட்டேன். இந்த உறவு பல்லாண்டுகளாக வளர்ந்து வருகிறது. மறைந்த ராஜிவ் காந்தி இந்திய சீன நட்புறவுக்கு ஆற்றிய பணிகளை பற்றி அறிவித்தமை மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அணுகுமுறை இந்திய சீன நட்புறவு பயணம் தொடர வழிவகுத்தது என்று அறிந்தபோது உயர்மட்ட தலைமைகள் பிற நாடுகளுடன் மேற்கொள்ளுகின்ற கொள்கை அளவிலான செயல்பாடுகள் நட்புறவின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.


கலை அடுத்தாக, உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா இன்றைய திபெத் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். செவிக்குணவாய் அலங்கரிக்கப்படுகின்ற சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில், புதுமை படைக்கும் புதிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வரும் இன்றைய திபெத் நிகழ்ச்சியை செவிமடுத்தோம். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக சீர்திருத்தம் வெற்றிபெற்று ஆண்டான் அடிமை அமைப்புமறை உடைக்கப்பட்டது. அனைவரும் சமம் என்ற பாதையில் உழைப்பே உயிர் நாடி என்ற நிலை மிகபெரிய மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன். பண்ணை சொந்தகாரர்களுக்கு உழைத்து சோர்ந்த கரங்கள், தத்தமது சொந்த இலக்குகளை அடைய உழைக்கலாம் என்ற சுதந்திரமான நிலை திபெத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்து கொண்டேன்.
தமிழன்பன் தொடர்வது, மெட்டாலா எஸ். பாஸ்கர் சீன உணவரங்கம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன உணவு என்றாலே சுவை தெரிகிறது. அதில் இறால், ஜெப்பார் பழம், முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளைக் கரு இவைகளை பயன்படுத்தி உணவு வகையை சமைக்க கற்று கொடுத்தால் சுவையின்றி இருக்குமா? எண்ணெய் விலை எகிறியுள்ள இன்றைய சூழ்நிலையில், எண்ணெய் இல்லாமல் இந்த உணவு வகையை சமைத்து ருசிக்க கற்றுக்கொடுத்தது சிறப்பு. எண்ணெய் பயன்படுத்தாத உணவை தான் உண்ண வேண்டும் என்ற கண்டிப்புடைய சிலருக்கு இந்த உணவு அவர்கள் எடுக்கும் மருந்துக்கு ஏற்ற உணவுவகையாக இருக்கும்.
கலை செய்திகள் பற்றி ஈரோடு தாசப்ப கவுண்டன் புதூரிலிருந்து எஸ். சுதர்ஷன் அனுப்பிய கடிதம். சீன வானெலி தமிழ் ஒலிபரப்பின் செய்திகளை கேட்டேன். வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பில்லா நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அறிந்தேன். அங்கு வேலைபார்க்கும் இந்தியரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களே அதிகம் என்பதையும், வேலைவாய்ப்பின்றி மாநிலம் திரும்பும் இளைஞர்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய, கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கேரள அமைச்சர் அறிவித்ததையும் அறியதந்தீர்கள். மொத்தமாக இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் இளைஞர்கள் வரை நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து சொந்த நாடுகளில் குடியேறி பணிபுரியும் அனைவரது ஆற்றலும் போற்றப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சியை தூண்டச்செய்ய முடியும்.


மின்னஞ்சல் பகுதி
வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்,
நவசீனாவின் வைரவிழா என்னும் பொது அறிவுப்போட்டிக்கான ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்டுரையில், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் சீனா பெற்ற சாதனைகள் பற்றி விரிவான முறையில் அறிந்து கொண்டேன். கடந்த 1971 ஆம் ஆண்டு தனது முதலாவது செயற்கைக் கோளை சீனா விண்ணில் செலுத்தியது முதல், சீனா பெற்று வரும் மாபெரும் வெற்றிகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். விண்வெளியில் சீன வீரர் நடந்தது, சீனா, பல்வேறு ஆய்வுகள் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டதன் ஓரு மாபெரும் பதிவும் முக்கிய நிகழ்வும் ஆகும். அதுமட்டுமின்றி, சந்திரனில் சீன வீரர் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும், சீனாவின் ஊலொங் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் கடும் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மனம்வருந்துகின்றேன். இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காணாமல் போன பிரான்சு நாட்டு விமானத்தில் பயணம் செய்தோரின் பூத உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன விமானத்தின் நிலை இதன் மூலம் தெரிய வந்தாலும், 9 சீன நண்பர்கள் உள்ளிட்ட 228 பேரின் சோகமான முடிவு மனதை வாட்டுகிறது.

1 2