மீனாட்சிபாளையம் கா. அருண் நவசீனாவின் வைரவிழா பொது அறிவு போட்டியின் நான்காவது கட்டுரையில் நவசீனாவின் தூதாண்மை உறவில் ஒளிவீசும் முன்னேற்றம் என்ற தலைப்பில் வழங்கப்பட்ட தகவல்களை கேட்டேன். சீனா முதன் முதலில் ஏற்படுத்திய தூதாண்மை உறவு முதல் இன்று வரை தூதாண்மை உறவில் சீனா கண்டுவரும் வளர்ச்சியை அறிய முடிந்தது. துதாண்மை உறவுகளுக்கு சீனா கடைபிடிக்கும் முக்கிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்க - சீன தூதாண்மை உறவின் வரலாற்றை அறிய தந்தீர்கள். இதைக்கேட்டபோது சீனா வெளிநாடுகளுடன் கொள்ளும் நட்புறவுக் கொள்கைகளை அறியமுடிந்தது. முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஹு சிந்தாவும், சீன கோ மின் தாங் கட்சியின் தலைவர் வூ போசியுங்கும் பெய்சிங்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ஆக்கபூர்வமானது. இரு கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கம், அரசியல் நம்பிக்கை, சீரான பரிமாற்றம் ஆகியவற்றை விரைவுபடுத்தி, இருகரை உறவின் அமைதி வளர்ச்சியை மேலும் முன்னேற்றுவதற்கு, இது முக்கியத்துவம் வாய்ந்தது. இது போன்ற சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சிகளால் பல துறைகளில் இருதரப்பும் ஒத்துழைக்க வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2008ம் ஆண்டின் ஜூலை திங்கள் முதல் இதுவரை தைவானில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சீன பெருநிலப்பகுதி மக்களின் எண்ணிக்கை, 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். இது இருதரப்பும் நெருங்கி வருவதன் அடையாளமாகும்.
ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் முணுகப்பட்டு பி்.கண்ணன் சேகர் அவர்களின் சீனப்பயணம் பற்றிய தகவல்களை, நிழற்படங்களுடன் உடனுக்குடன் சீன வானொலியின் தமிழ் இணையதளத்தின் சிறப்புப் பக்கத்தில் வெளியிட்டமைக்கு நன்றிகள். கடந்த வெள்ளிக்கிழமை ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் முதன் முறையாக தயாரித்து அனுப்பிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியமைக்கு எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். புதிய நேயர் மன்றங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் சீன வானொலி நீடூழி வாழ்கவே. புதுக்கோட்டை ஜி. வரதராசன் மக்கள் சீனம் நிகழ்ச்சி கேட்டேன். நடுத்தர மற்றும் சிறிய தொழில்களின் வளர்ச்சிக்காக சீன அரசின் நிதி திரட்டல் பற்றிய ஒலிபரப்பு பயனுள்ளதாக அமைந்திருந்த்து. சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடும் வேலைவாய்ப்பில் 80 விழுக்காடு வழங்கி வரும் நிறுவனங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சியில் முன்மாதிரியாக சிறந்து விளங்க சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. 2008 உலக நிதி நெருக்கடியால் இந்த நிறுவன்ங்கள் நிதி சிக்கலில் திணறி, மோசமாகி வரும் நேரத்தில் அரசின் இந்த சரியான முயற்சி, திட்டமிட்ட சீர்திருத்தம் வரவேற்புக்குரியது.
நாகர்கோவில் பிரின்ஸ் ராபர்ட் சிங் சீனாவின் சோங்சிங் நகரின் லியாங் லூ சுன் தான் முதலாவது வரி விலக்கு நில பிரதேசமாக அதிகாராபூர்வமாக கட்டியமைக்கப்படுவதை அறிந்தேன். இது உலக அளவில் நினைவில் கொள்ள வேண்டிய செயலாகும். உலக நாடுகள் பல வரிக்கு மேல் வரி விதித்து மக்களின் சுமையை அதிகரிக்க செய்யும்போது, சீன அரசு படிப்படியாக வரி விலக்கு என்ற கருத்தை வழங்கி அதனை செயல்படுத்தவுள்ளது. இது பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். பாராட்டுக்கள். ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி கேட்டேன். அதில் சுயதொழில் நடத்தும் இளைஞர்கள் எனும் கட்டுரையில் மலர் வடிவமைப்புத் துறை, நுண்கலைத் துறை, ஒப்பனைத் துறை, ஆயத்த ஆடைகளுக்கு மாதிரி என்ற நான்கு வேறுபட்ட துறையை சேர்ந்த 4 இளைஞர்கள், திருமண ஆடையை வடிவமைத்து, மணமக்களை ஒப்பனை செய்யும் மையமொன்றை பெய்ஜிங்கில் உருவாக்கிய செய்தியும், தலைநகரில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகம் பற்றியும் அறிந்தேன். எவ்வளவு தான் படித்தாலும் தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காமல் செயல்பட்டால் வேலையில்லா நிலை குறைய தொடங்கும். மதுரை, அண்ணாநகர் ரா. அமுதாராணி 1997ல் ஜான்ஸி, பெய்ஜிங் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கொண்டுவரப்பட்டது என்று சீன வானொலியின் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது இரண்டு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் ஆற்றலை இது எட்டியள்ளது. இந்த எரிவாயு திட்டம் சீனாவில் வெற்றி கண்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
1 2
|