1949ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் சீன மக்கள் குடியரசின் நடுவண் மக்கள் அரசு உருவானது பெய்ஜிங்கில் அறிவிக்கப்பட்டது. தற்காலிக அரசியல் அமைப்புச் சட்டப்பயன்பாட்டை வகிக்கும் "சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டு பணித்திட்ட விதிகளின்"படி, சீன மக்கள் குடியரசின் அரசியல் அதிகாரம் மக்களைச் சாரும். மக்கள் அரசியல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வாரியங்கள் பல்வேறு நிலை மக்கள் பேரவைகள் மற்றும் பல்வேறு நிலை அரசாங்கங்களாகும். தேசிய மக்கள் பேரவை கூட்டம் துவங்குவதற்கு முன், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முழு அமர்வு மூலம் தேசிய மக்கள் பேரவையின் அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படும். சீன மக்கள் குடியரசின் நடுவண் மக்கள் அரசின் உருவாக்க சட்டம் முழு அமர்வில் வகுக்கப்படும். சீன மக்கள் குடியரசின் நடுவண் மக்கள் அரசு கமிட்டி இந்த முழுஅமர்வில் தேர்ந்தெடுக்கப்படும்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்வேறு ஜனநாயக கட்சிகள் பல்வேறு மக்கள் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஜனநாயக ஒன்றிணைப்பு நிறுவனமாகும். நவ சீனாவின் தொடக்க வரலாற்றில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு சீன மக்கள் பேரவையின் சார்பில் அதிகாரத்தை நடைமுறைபடுத்தும் பெருமை கொண்டது. நாட்டின் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அப்போதைய புரட்சி மற்றும் கட்டுமான கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு முக்கிய பங்கு ஆற்றியது. மக்கள் பேரவை அமைப்பு முறைமையின் வளர்ச்சி வரலாற்றில் முக்கிய காலகட்டமாக இது திகழ்கிறது.
1 2
|