• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 09:46:06    
சீனாவின் வழக்கறிஞர் Zhou Na Xin அம்மையார்

cri
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி நடைமுறையாகி வந்துள்ள கடந்த 30 ஆண்டுகளில், வழக்கறிஞர்கள், சீனாவின் சட்ட அமைப்பு வளர்ச்சி போக்குடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர். பெய்சிங்கின் வழக்கறிஞர் துறையில், உன்னத குணமும் நன்மதிப்புமுடைய ஒரு மூதாட்டி இருக்கின்றார். பெய்சிங் மாநகரின் நீதி சட்ட ஆணையகத்தின் முன்னாள் துணைத் தலைவர் Zhou Na Xin அம்மையார் தான் அவர்.
ஒரு குளிர்கால நாளின் பிற்பகல், பெய்சிங் மாநகரின் சட்ட உதவி நிதியத்தில், Zhou Na Xin அம்மையார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் 76 வயதை அடைந்துவிட்ட போதிலும், உடல் நலத்தோடு இருக்கின்றார்.
1954ஆம் ஆண்டு, பெய்சிங் அரசியல் மற்றும் சட்டக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற அவர், He Bei மாநிலத்தின் மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தில் அரசு வழக்கறிஞராக வேலை செய்யத் துவங்கினார். ஆனால் தனியார் வழக்கறிஞராக மாற வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். பலமுறை விண்ணப்பித்ததன் மூலம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அவரது கனவு நனவாகியது. அவர் பெய்சிங் வழக்கறிஞர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு, ஒரு தனியார் வழக்கறிஞராக மாறினார். ஆனால், கடந்த நூற்றாண்டின் 60 மற்றும் 70ஆம் ஆண்டுகளில், பண்பாட்டுப்புரட்சி, சீனாவில் கடும் சீர்குலைவை ஏற்படுத்தியது. சீனாவின் சட்ட அமைப்பின் வளர்ச்சிப் போக்கு நிறுத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் அணி கலைக்கப்பட்டது. Zhou Na Xin வேறு தொழில் செய்ய தொடங்கினார்.

1978ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மத்தியக் கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை முன்வைக்கப்பட்டது. இக்கூட்டத்தொடரில், சோஷிலிச சட்ட அமைப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் பிறகு, பெய்சிங் மாநகரின் உயர் நிலை மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகப் பணியகம், வழக்கறிஞர் ஆயத்தப் பிரிவை நிறுவியது. 1978ஆம் ஆண்டு, Zhou Na Xin அம்மையார் பெய்சிங்கின் வழக்கறிஞர் அணிக்கு திரும்பி, இப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Zhou Na Xin அம்மையார் உணர்வுப்பூர்வமாகவும், பொறுப்புடனும் வேலைசெய்து வந்தார். ஒருபுறம், அவர் வழக்கறிஞராக வழக்குகளைக் கையாண்டார். மறுபுறம், வழக்கறிஞர் அணியை மீட்க அவர் ஆயத்தம் செய்தார். சில முயற்சிகளுக்கு பின், 20க்கு அதிகமானமோர் இடம்பெறும் சட்ட ஆலோசனை பிரிவு நிறுவப்பட்டது. Zhou Na Xin அம்மையார் கூறியதாவது:
"அப்போது, பெரும்பாலான வழக்கறிஞர்கள் குற்றவியல் வழக்குகளைக் கையாண்டனர். பொது மக்கள் விவகார வழக்குகள் குறைவு" என்றார், அவர்.
அக்காலத்தில், வழக்கறிஞர் தொழில் பற்றி பொது மக்கள் தப்பெண்ணங்கள் கொண்டிருந்தனர். சில சமயங்களில், நீதிபதிகள் கூட வழக்கறிஞர்களை புரிந்து கொள்வதில்லை.
1979ஆம் ஆண்டு "குற்றவியல் சட்டம்", "குற்றவியல் வழக்குச் சட்டம்" உள்ளிட்ட 7 முக்கிய சட்டங்கள் வெளியிடப்பட்டன. 1980ஆம் ஆண்டு, "வழக்கறிஞர் தற்காலிக விதிகள்" வெளியிடப்பட்டன. இதன் மூலம் குற்றம் சாட்டப்படும் பிரதிவாதிகளுக்கு நியாயம் கற்பிக்கும் உரிமைகளும் வழக்கறிஞர் அமைப்பு முறையும் அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டன.
சீர்திருத்தம் தீவிரமடைவதுடன், சீனாவில் திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உயிர்த்துடிப்புள்ள சந்தை பொருளாதாரமாக படிப்படியாக மாறத் துவங்கியது. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்தன. மக்களிடம் சட்டம் பற்றிய கருத்துக்கள் வலுப்பட்டன. Zhou Na Xin அம்மையார் கையாண்ட வழக்குகள், குற்றவியல் துறை முதல், பொது மக்கள் விவகார துறை வரை விரிவாகின.
இதற்கிடையில், உட்புகுத்தப்பட்ட அன்னிய முதலீட்டின் அதிகரிப்பு, வழக்கறிஞர்களின் பணியில் புதிய உள்ளடக்கத்தைச் சேர்த்தது.
1 2