• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 09:46:06    
சீனாவின் வழக்கறிஞர் Zhou Na Xin அம்மையார்

cri

அப்போது, வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களில் அடங்கினர். அவர்கள் அரசு ஊதியம் பெறுபவர்கள். எனவே அன்னிய வணிகர்கள் சிலர், வழக்கறிஞர்களின் தகுநிலை பற்றி சந்தேகப்பட தொடங்கினர். Zhou Na Xin அம்மையார் கூறியதாவது:
"1984, 1985ஆம் ஆண்டுகளில், அன்னிய வணிகர்கள் சீனாவுக்கு வந்தனர். 'நீங்கள் வழக்கறிஞராக, முதலீட்டாளர்களின் நலன்களை பேணிக்காக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றும், ஆனால் அரசு ஊதியம் பெறுகிறீர்களே என்றும்' அவர்கள் கூறினர். இதனால், அவர்கள் தங்களது வழக்குகளில் வாதாட சீன வழக்கறிஞர்களை அமர்த்துவதற்குப் பதிலாக, தமது வழக்கறிஞரை சீனாவுக்கு அழைத்து வந்தனர்" என்றார், அவர்.
அன்னிய வணிகர்களின் இந்த சந்தேகத்தினால், Zhou Na Xin உள்ளிட்ட சட்டத் துறையினர் மாற்று வழிகளை சிந்திக்க துவங்கினர். வழக்கறிஞர்கள் தொடர்புடையவருக்கு சட்ட சேவையை வழங்கும் பணியாளராக மாறச்செய்யும் பொருட்டு, வழக்கறிஞர் விவகாரத்துக்கு அரசு பொறுப்பேற்கும் நிலைமையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கருதினர்.
1986ஆம் ஆண்டு, Zhou Na Xin அம்மையார் பெய்சிங் மாநகரின் நீதி சட்ட ஆணையகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆழமான ஆய்வுக்கு பின், வழக்கறிஞர் அமைப்பு முறையை சீர்திருத்துவது பற்றிய யோசனையை நீதி சட்ட அமைச்சகத்துக்கு Zhou Na Xin அம்மையார் முன்வைத்தார். Zhou Na Xin முதலியோரின் தூண்டுதலுடன், 1988ஆம் ஆண்டு, சில இடங்களில், வழக்கறிஞர் அமைப்பு முறை சீர்திருத்தத்தைத் துவக்க நீதி சட்ட அமைச்சு தீர்மானித்தது. சீர்திருத்தத் திட்டத்தின் படி, புதிய அமைப்பு முறையின் கீழ், வழக்கறிஞர் விவகார நிறுவனங்கள், நட்டம் இலாபம் ஆகியவற்றுக்கு சுயமாக பொறுப்பு ஏற்கும். அரசின் நிதித்தொகையைப் பெறாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய வழக்கறிஞர் விவகார நிறுவனம், ஒத்துழைப்பு அமைப்பு முறை வழக்கறிஞர் விவகார நிறுவனம் என அழைக்கப்படுகின்றது. சீனாவின் வழக்கறிஞர் அமைப்பு முறையின் சீர்திருத்தத்தில் இது முக்கிய பகுதியாகும்.
பெய்சிங்கில் ஒத்துழைப்பு அமைப்பு முறை வழக்கறிஞர் விவகார நிறுவனம் சோதனை முறையில் துவங்கியது. இதற்காக பெய்சிங்கின் நீதி சட்ட துறை, அணிதிரட்டும் கூட்டத்தை நடத்தியது. Wang Yi Ling என்னும் வழக்கறிஞர் முதலாவதாக பதிவு செய்தார். வழக்கறிஞர் துறையில் அவர் ஒரு அதிக அனுபவமுடையவர். Zhou Na Xin அம்மையாரின் வழிக்காட்டலுடன், 1988ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் இறுதியில், Wang Yi Lingஐப் பொறுப்பாளராகக் கொண்ட Jing Wei வழக்கறிஞர் விவகார நிறுவனம் நிறுவப்பட்டது. சீனாவின் முதலாவது ஒத்துழைப்பு அமைப்பு முறை வழக்கறிஞர் விவகார நிறுவனம் இதுவாகும். அந்த ஆண்டு இறுதியில், அரசு வழக்கறிஞர் விவகார நிறுவனங்களுடன் ஒப்பிட்ட போது, இந்நிறுவனம் நல்ல பொருளாதாரப் பயன்களை பெற்றிருந்தது.
1993ஆம் ஆண்டு, பெய்சிங் மாநகரின் நீதி சட்ட ஆணையகம், பங்குதாரர் அமைப்பு முறை வழக்கறிஞர் விவகார நிறுவனங்களின் சோதனைப் பணியைத் துவக்கியது. பல நிறுவனங்கள் இதில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்தன. 1995ஆம் ஆண்டு, நாடு முழுவதிலும் அனைத்து வழக்கறிஞர் விவகார நிறுவனங்களும், பங்குதாரர் முறை வழக்கறிஞர் விவகார நிறுவனங்களாக மாறின. 1996ஆம் ஆண்டு, "வழக்கறிஞர் சட்டம்" அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம் சீனாவின் வழக்கறிஞர் தொழில், உயர் வேகமாக வளர்ந்து வரும் பொற்காலத்தில் நுழைந்தது.

1998ஆம் ஆண்டு, 65 வயதான Zhou Na Xin அம்மையார் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சட்ட பணியில் பல்லாண்டு ஈடுபட்ட அவர், பொது மக்களின் மத்தியில் சட்டம் பற்றிய கருத்துக்கள் வலுப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டார். ஆனால், கிராமங்களில் சிலருக்கு சட்டம் பற்றிய கருத்துக்கள் மிக குறைவு என்று அவர் கண்டறிந்தார். இதனால், மேலதிக நேரத்தில் சட்ட உதவியை வழங்கும் பொது நலன் இலட்சியத்தில் கவனம் செலுத்தி, பெய்சி்ங் மாநகரின் சட்ட உதவி நிதியத்தின் தலைமை இயக்குநராக அவர் பதவி ஏற்றார். அவர் கூறியதாவது:
"இணக்கமான சமூகம் என்றால், நகரப்பகுதிகளில் இணக்கம், செல்வந்தர்களுக்கிடை இணக்கம் என்பவை மட்டுமே பொருள்படவில்லை. நலிந்த குழுவினரும் இணக்கமாக வாழ வேண்டும். அனைவரும் சமம்" என்றார், அவர்.
சட்ட உதவி, "நேர்மை, நியாயம்" என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது. இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் இது முக்கிய பங்காற்ற முடியும்.
ஆனால், சட்ட உதவி அமைப்பு முறை தொடக்க காலக்கட்டத்தில் தான் இன்னும் இருக்கின்றது. சட்ட உதவியில் மேலதிக பொது மக்கள் கவனம் செலுத்தி, அதை புரிந்துக் கொள்ளச்செய்யும் வகையில், Zhou Na Xin அம்மையார் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சட்ட உதவி நிதியத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றார். சமூகத்தின் வளர்ச்சியுடன், இந்த பொது நலன் இலட்சியத்தில் மேலதிக மக்கள் பங்கெடுத்து, இதை ஆதரிப்பர் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
1 2