 தற்போது சீனாவில், மெமேன்லும் அதிகமான விவசாயிகள் நகரங்களுக்குச் சென்று வேலை புரிகின்றனர். இந்த நிலைமையில் சுமார் 2 கோடி கிராமபுறக் குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்து வேறு குடும்பத்தினரின் பராமரிப்பில் தனியாக தனியாக வாழ வேண்டியிருக்கின்றனர். இக்குழந்தைகள் எவ்வாறு நல்ல கல்வி பெற்று இன்பமாக வளர செய்வது என்பது, சீனக் கல்வி துறையின் முக்கிய பணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன் ஹுய் மாநிலம் சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய வேளாண் மாநிலமாகும். கிராமக்குழந்தைகளின் கல்வி பிரச்சினையைத் தீர்ப்பதில் இம்மாநிலம் அதிக பயனுள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஆன் ஹுய் மாநிலத்து ling bi மாவட்டத்தில் chan tang மைய பள்ளி பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
மகிழ்ச்சியான குழந்தைகள், விசாலமான ஒளிமயமான வகுப்பறைகள், சுத்தமான விடுதிகள் மற்றும் உணவு விடுதி, சீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விளையாட்டு திடல் ஆகியவை அப் பள்ளியில் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அந்தச் சாதாரண துவக்கப் பள்ளி விடுதிகள் கொண்ட பள்ளியாக மாறியதற்கான காரணத்தை பள்ளியின் தலைவர் எங்கள் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது
2004ம் ஆண்டு எமது பள்ளியில் பயின்ற ஒரு மாணவன் அடிக்கடி பள்ளிக்குத் தாமதமாக வர தொடங்கினான். கல்வி மதிப்பெண் பெரிதும் குறைந்திருந்தது. அவரது குடும்ப நிலையை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அப்போது தான் அவரது பெற்றோர்கள் வெளியூருக்குச் சென்று வேலை பார்கின்றனர் என்றும், தாத்தா, பாட்டி ஆகியோருடன் வசித்திருந்தான். ஆனால், முதியோர்கள் அவனை சிறப்பாக கண்காணிக்க முடியவில்லை என்றும் அறிந்ததாக அவர் கூறினார்.
பிறகு, பள்ளி தரப்பு சில கள ஆய்வுகளை மேற்கொண்டது. பல மாணவர்களின் பெற்றோர்கள் அவ்வாறுவெளியூர்களில் வேலை செய்வதை ஆய்வு முடிவு காட்டியது. அப்படி பெற்றோரை பிரிந்துள்ள குழந்தைகள் பாட்டி தாத்தாக்களால் தற்காலிகமாக கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். இதனால் குடும்பத்தில் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய அறிவில் பற்றாகுறை நிலைமை நிலவியது. ஆகையால், பல குழந்தைகள் நற்செயல் பழக்கவழக்கங்களை கொண்டிருக்கவில்லை. அவர்களில் சிலர் அடிக்கடி பள்ளிக்கூடம் வருவதில்லை.
பள்ளியை நடத்தும் புதிய வழிமுறைகளைக் கண்டுப்பிடிக்க பள்ளித் தலைவர்கள் பாடுபட்டனர் பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளை பள்ளிக்குள் தங்க வைத்து, அவர்களது கல்வியையும் ஆளுமையையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கருதினர். 2005ம் ஆண்டு, chan tang மைய பள்ளி, மாணவர் விடுதிக்கான கட்டுமானத்தைத் துவக்கியது. தலைவர் zhou chang bin கூறியதாவது
பள்ளியை சீரமைக்க பல பொருட்களையும் வசதிகளையும் வாங்கினோம். மாணவர்களின் வாழ்க்கையை கண்காணித்து வழி நடத்தும் பொருட்டு, 5 சிறப்பு ஆசிரியர்களை அமர்த்தினோம். மாணவர்களின் விடுதி வாழ்க்கைக்கு அவர்கள் பொறுப்பேற்கின்றனர். இவர்கள் குழந்தைகளின் ஆடைகளை துவைத்து கொடுப்பதோடு, இரவில் அவர்களுடன் தூங்குகின்றனர். தவிர, குழந்தைகளின் மன உணர்வுகளையும் சுகாதாரத்தையும் கவனித்து கொள்கின்றனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் பெண்கள், இப்பள்ளியிலான மாணவர்களின் தாய் போல் அவர்கள் செயல்படுகின்றனர் என்றார் அவர்.
இம்மாணவர்களுக்கு உணவு தயாரிக்க, சிறப்பு சமையலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு பல்வகை ஊட்டச் சத்து மிக்க உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்று தலைவர் சோ எடுத்து கூறினார்.
முதியோர் வாங்கின் மகனும் மகளும் வேலை செய்வதற்காக வெளியூருக்குச் சென்றுள்ளனர். அவர்களுடைய குழந்தைகள் தாத்தா வீட்டுக்கு அனுப்பப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். துவக்கத்தில், தாத்தாவான வாங் ஐயத்துடன் பல முறை சான் தாங் மைய பள்ளிக்கு வந்து சோதனை செய்தார். இந்தப் பள்ளியில் மாணவர்களின் கல்வியும் வாழ்க்கையும் நன்றாக ஏற்பாடு செய்யப்படுவதைக் கண்டு, தனது 4 பேர பிள்ளைகளையும் அந்தப் பள்ளிக்கு அனுப்பினார். தாத்தாவான வாங் கூறியதாவது
2005ம் ஆண்டு, எனது பேரப் பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பினேன். அதற்குப் பின், அவர்களிடத்தில் பெரும் மாற்றம் காணப்படுகின்றனர். கல்வி மதிப்பெணும் மெதுமெதுவாக உயர்த்துள்ளது. இரவிலும் ஆசிரியர்களை அவர்களைக் கவனிக்கின்றனர். இனிமேல் அவர்கள் பற்றி கவலையே நமக்கு வேண்டாம் என்றார் அவர்.
தவிர, இங்குள்ள மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பெற்றோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த செயல்பாடு, வெளியூரில் பணி புரியும் பெற்றோரை தங்கள் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட செய்தின்றது என்று மாணவர்களின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
1 2
|