
பெற்றோரின் வேலை வாய்ப்பால் அவர்களைப் பிரிந்த குழந்தைகளின் கல்வி பதிவு உயர்ந்ததுடன், இத்தகைய கூட்டு வாழ்க்கையில் சக மாணவர்களுக்கிடை நட்புறவும் தனியாக வாழும் திறனும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 6வது வகுப்பைச் சேர்ந்த மாணவி சாங் பிங்பிங் கூறியதாவது
இங்கே வந்த பிறகு, எனது கல்வி மதிப்பெண் தெளிவாக உயர்ந்துள்ளது. இங்கே பல சக மாணவர்களுடன் பழகலாம். வகுப்புக்குப் பின், சேர்ந்து விளையாடலாம். கல்வியும் வாழ்க்கையும் ஒழுங்கப்படுத்தப்பட்டுள்ளன. சக மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் கவனித்து, சகோதரன் சகோதரியாக வாழ்கின்றோம் என்றார் அவர்.
இருந்த போதிலும், பள்ளியின் வசதிகள் எதிர்கால வளர்ச்சியின் தேவையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளன என்று பள்ளித் தலைவர் சோயும், ஆசிரியர்களும் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினை, விரைவில் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. Ling bi மாவட்ட கல்வி ஆணையத்தின் தலைவர் liu zhai bin இது பற்றி கூறியதாவது,
ஏற்கனவேயுள்ள அடிப்படையில் பள்ளிகளில் விடுதிகளின் கட்டுமானத்துக்கு 2006ம் ஆண்டு நடுவண் அரசு சுமார் 20 இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்தது. பள்ளியின் கட்டிடங்களை சீரமைப்பதில், நடுவண் மற்றும் உள்ளூர் அரசுகள் 7 கோடிக்கும் அதிகமான யுவானை வழங்கி, இதில் பெரும்பாலானவை பள்ளிகளில் விடுதிகள் மற்றும் இதர வசதி கட்டுமானங்களுக்கு பயன்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
இந்தக்கொள்கையின் அடிப்படையில் கிடைத்த தொகையில் தான் சான் தாங் மைய பள்ளியில் புதிய உணவு விடுதி கட்டியமைக்கப்பட்டது. வளாகம் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாக பெற்றோரின் வேலைவாய்ப்பால் அவர்களை பிரிந்த குழந்தைகள் இங்கே அன்பை உணர்ந்துள்ளனர் எனது பள்ளி என் குடும்பம் என்று அவர்கள் கூறுகின்றனர். 1 2
|