• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-23 10:04:29    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துகளை அனைவரும் அறிய தொகுத்து வழங்குகின்றோம்.
கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, மணமேடு எம் தேவராஜா சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி குறித்து அனுப்பிய கடிதம். சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி வசந்தவிழாவிற்கு பின் 15 வது நாளில் பெய்ஜிங்கில் கொண்டாடப்படும் பாரம்பரிய யுவான் சியௌ விழா நடவடிக்கை பற்றி கேட்டேன். பெய்ஜிங்கிலுள்ள சியன்மன் வீதியை ஒரு நுற்றாண்டுக்கு முந்திய நிலையில் பராமரித்து வசந்தவிழாவின் இறுதிக்கட்டத்தை விமரிசையாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடும் ஏற்பாடுகள் சுற்றலா பயணிகளை வெகுவாக ஈர்க்குமென்பதில் ஐயமில்லை. மாடு ஆண்டு வசந்த விழா இறுதிகட்ட கொண்டாட்டங்களில் நேயர்களையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.


தமிழன்பன் தென்பொன்முடி தெ.நா. மணிகண்டன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். திபெத் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய சீன வானொலி ஒலிபரப்பை கேட்டேன். தலைமை மத குருமார் என்ற போர்வையில் தலாய் லாமாக்கள் திபெத் இன மக்களை பண்ணை அடிமைகளாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்து மிகவும் கொடுமைப்படுத்தி வந்த சூழ்நிலையை அறிந்தேன். சீனாவின் தலையீட்டால் லாமாக்களின் பிடியிலிருந்து திபெத் மக்கள் மீட்கப்பட்டு, அவர்களின் விடுதலை வாழ்வில் ஒளியேற்றியது மிகவும் பெருமைக்குரிய செயல்பாடாகும். இதனால் கடந்த 50 ஆண்டுகளில் திபெத் இன மக்கள் பல்வேறு துறைகளில் பலவித வளர்ச்சிகள் அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் புரிந்து கொண்டேன்.
கலை அடுத்தாக, மதுரை அண்ணாநகர் என். இராமசாமி சீன வங்கித்துறையின் வளர்ச்சியை குறிப்பிட்டு அனுப்பிய கடிதம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் வீடு மற்றும் நிலச் சொத்துக்களின் கடன் பிரச்சனையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி உலகளவில் பரவியுள்ளதை சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து கொண்டேன். 2008 ஆம் ஆண்டில் உலக வர்த்தத்துறை நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், சீன வங்கித்துறை நிதானமாக வளர்ந்துள்ளது பாராட்டுதற்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருப்பதை இது காட்டுகிறது.
தமிழன்பன் அடுத்தாக, உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி கே.கே போஜன் அனுப்பிய கடிதம். உலகில் பல வானொலி நிலையங்கள் இருக்கின்றன. சீன வானொலிக்கு இவ்வளவு ஆதரவு இருப்பதை பேளுக்குறிச்சி நேயர் மன்ற மாநாட்டிற்கு வந்த பின்னர் தான் அறிந்து கொண்டேன். இந்த கருத்தரங்கிற்கு வந்த அனைவரும் ஜாதி, மதம், அரசியல் கலக்காத பெரியோர், சிறியோர், வசதி படைத்தோர் வசதியில்லாதோர், படித்தவர், படிக்காதவர் என எல்லா தரப்பினரும் ஒன்று சேர்ந்துள்ளது சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நேயர் மன்ற குடும்பம் என்ற உணர்வை தருகிறது என்று திருமதி ராஜாராம் கடந்த ஆண்டு நடைபெற்ற நேயர் மன்ற கருத்தரங்கில் ஆற்றிய உரை எழுச்சி தந்தது. சீன வானொலி தமிழ் ஒலி்பரப்பின் குடும்ப உணர்வுகளை தொடர்ந்து காப்பது நேயர்களாகிய நமது அனைவரின் கடமையாகும்.


கலை தொடர்வது, சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி சீன வரலாற்று சுவடுகள் பற்றி எழுதிய கடிதம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் உதவி புரிவது அந்நாட்டின் கல்வி வளர்ச்சியாகும். அந்த வகையில் சீனாவில் நடைபெற்ற சீர்திருத்தப்பணியின் 30 ஆண்டுகளில் திபெத்தில் கல்வித்துறை வளர்ச்சியில் சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அதிகமாக தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியது.
மின்னஞ்சல் பகுதி
மீனாட்சிபாளையம் கா. அருண்
நவசீனாவின் வைரவிழா பொது அறிவுப்போட்டி கட்டுரைகள் பற்றிய எனது கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன். நவசீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் ஐந்து கட்டுரைகளும் ஒலிபரப்பாயின. சீனாவின் சட்ட அமைப்பு கட்டுமானம், வேளாண்துறை, தூதாண்மை, விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவின் சாதனைகளை இந்த கட்டுரைகள் மூலம் அறியமுடிந்தது. மேலும் இன்றைய திபெத் நிகழ்ச்சியில், திபெத் இனத்தைச் சேர்ந்த வாசன்தாலா அவர்களும் அவரது நண்பர்களும் பெய்ஜிங்கில் திபெத் இனப்பண்பாட்டை கடைபிடித்து, இணைந்து வாழ்ந்து வருவதை அறிந்து கொண்டேன். பெய்ஜிங்கில் வாழும் திபெத்தியர்கள் திபெத் இன பண்பாட்டு பிரதிநிதிகளாக விளங்கி வருவதாக உணர்ந்தேன்.


புதுக்கோட்டை ஜி வரதராஜன்
சீன வானொலியில் ஒலித்த செய்தித் தொகுப்பில் திருமதி கலையரசி அவர்கள் சீனாவின் அனுமதி அமைப்புமுறை பற்றி விளக்கியது பாரட்டும்வகையில் அமைந்திருந்த்து. சீன நிலைமைக்கு ஏற்ற நிர்வாக வழிமுறைகளை ஆராய்ந்து உலகளவிலும், சீன நாடளவிலும் அனுமதி அமைப்பு முறையை நெருக்கமாக இணைக்கும் வளர்ச்சிப் பாதையை படிப்படியாக உருவாக்க பாடுபடுவது அதிக பயன்தரும். தரப் பாதுகாப்பை பேணிக்காத்து சீனப் பொருளாதாரத்தை உலகிற்கு பரப்பும் முன்னேற்ற போக்கிலும் இந்த அனுமதி அமைப்புமுறை முக்கிய பங்கு ஆற்றும். அனுமதி சான்றிதழ் பெறுவதில் எளிய முறைகளை நடைமுறை படுத்துவதில் சீனா முன் உதாரணமாக திகழ்வது வரவேற்கதக்கது.

1 2