• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-23 10:04:29    
நேயர்களின் கருத்துக்கள்

cri

முணுகப்பட்டு பி. கண்ணன் சேகர்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் உலகப் பொருட்காட்சிக்கு பல நாடுகளும் தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்தேன். அடுத்த வருடம் மே முதல் நாள் தொடங்கயிருக்கும் இந்த கண்காட்சிக்கு காட்சி அரங்கங்களை, பங்கேற்கும் நாடுகள் முனைப்பாக உருவாக்கி வருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். சிங்கப்பூர் காட்சி அரங்கம் முன்கூட்டியே அமைக்கப்பட்டு வருவதின் மூலம், பங்கேற்பில் சிங்கப்பூர் காட்டும் ஆர்வம் தெரிகிறது. உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஷாங்காய் பொருட்காட்சியை பயன்படுத்தி பல நாடுகளும் தங்கள் தயாரிப்பு பொருட்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். இது, உலக நாடுகளின் மத்தியில் நல்ல இணக்கம் ஏற்படவும் சீனாவின் நட்புப்பாதை வளரவும் வாய்ப்பாக அமையும்.
சேந்தமங்கலம் எஸ்.எம். இரவிசந்திரன்
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் வளவனூர் புதுப்பாளையம் திரு. எஸ்.செல்வம் அவர்களின் உரையை கேட்டேன். அவர் 2 அல்லது 3 இணையதளங்களில் உலாவந்து குறுந்தகவல்களை நாள்தோரும் அனுப்பிவருகிறார் ஒருநாளைக்கு 10க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புவதோடு அவர் ஒருநாளைக்கு 3 மணி நேரம் சீன வானொலிக்காக செலவிடுகிறார் என்பதையும் அறிந்து கொண்டேன். மேலும், ஜூன் 7 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சேந்தமங்கலத்தில் நாமக்கல் மாவட்ட சீன வானொலி நேயர்கள் மன்ற கூட்டமும், சீனப்பயணம் சென்று வந்த முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழாவும், சீனப்பயண அனுபவங்களை தொலைபேசி மற்றும் நேரில் கேட்டறியும் நிகழ்ச்சி அதன் ஒலிப்பதிவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 20க்கும் மேலான நேயர்கள் நேரிலும், 29நேயர்கள் பல மாவட்டங்களிலிருந்து தொலைபேசி மூலமும் பங்கேற்று முனுகப்பட்டு கண்ணன்சேகர் அவர்களிடம் கேள்வி கேட்டு அவரது சீன அனுவங்களை அறிந்து கொண்டனர்.


ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்
நட்புப் பாலம் நிகழ்ச்சியில் தனது சீனப் பயண அனுபவத்தின்பொது சீனாவில் அமைச்சர்கள் மக்களோடு மக்களாக இணைந்து எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கேட்டு பெருமை கொண்டேன். ஓர் உலகம் ஒரு கனவு என்ற கோட்பாட்டை சீன மக்கள் சொல்லளவில் அல்லாது உண்மையாக கடைப்பிடிப்பதை உலகு அறிந்துகொள்ள இதுவொரு சான்று. மேலும், நானும், எனது மனைவி நித்தியாவும் ஊட்டியில் உள்ள சுற்றுலாப் பகுதியான தொட்ட பெட்டா எனும் தமிழ் நாட்டின் மிக உயர்ந்த‌ மலைச்சிகரத்தில் சீன தொப்பிகள் மற்றும் சீன விளையாட்டு பொம்மைகள் விற்பனை செய்யும் நடை பாதைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
மதுரை, அண்ணாநகர் ஆர்.அமுதாராணி
சீனாவில் உணவுப் பொருட்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ப, சீன அரசு ஜுன் முதல் நாள் தொடக்கம், உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி கூடிய விரைவில் உணவுப் பொருள் பாதுகாப்பில் ஏற்படும் இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கலாம். சீன நடுவன் அரசு உணவுப் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறையை இது சுட்டிக்காட்டுகிறது.


திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
ஜூன் 9 ஆம் நாள் இரவு ஒலிபரப்ப்பு 11700,13600 ஆகிய அலைவரிசைகளில் சீன வானொலி நிகழ்ச்சிகளை மிகவும் தெளிவாக கேட்க முடிந்தது. சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் வூசி நகரம் பற்றி கலைமகள் சுவரசியமான தகவல்களை வழங்கினார். ஷாங்காய் மாநகரின் அருகிலுள்ள இந்த நகரத்தின் அழகையும், சிறப்பையும் தெளிவாக அவர் விளக்கினார். மலர்விழி அவர்கள் விட்டுச்சென்ற இடத்தை திறம்பட பூர்த்தி செய்யமளவுக்கு வூசி நகரின் தனிச்சிறப்பு பற்றிய தெளிவான தகவல்களை திரட்டப்பட்டிருந்தன. பாராட்டுக்கள்
நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்
சீனா 1,572 சீருந்துகளை ஜூன் திங்கள் கியூபாவுக்கு ஏற்றுமதி செய்வது, இரு மக்கள் குடியரசுகளின் நட்பு மேலும் வளர வழி ஏற்பட்டியுள்ளது. சீருந்துகளின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 25 விழுகாடு அதிகமாக இருப்பது இத்துறையில் சீனாவின் வளர்ச்சியை அறிவிக்கிறது. பிரான்ஸ் பயணியர் விமான விபத்தில் காணமல் போன சீனப் பயணியரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்.
ஜுன் 18ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ள. பெய்ஜிங் சர்வதேசச் சுற்றுலாப் பொருட்காட்சி பற்றியும், அதில் 82 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வணிகர்கள் கலந்து கொள்வதையும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் சீனாவிலுள்ள 25 மாநிலங்கள், நகரங்கள், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவானிலிருந்து வருகின்ற வணிகர்களும் வர்த்தகர்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதால் இப்பொருட்காட்சி நிச்சயம் வெற்றியடையும்.


1 2