• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-24 19:11:04    
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui அ

cri

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் இறுதியில், 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஏலத்தொழில் துறை சீனாவில் மீட்கப்பட்டது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையின் காரணமாக, ஏலத்தொழில் துறை சீனர்களின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து, வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் Liu Xin Hui எனும் தொழில் முறை ஏலம் இடுபவரை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். அதன் மூலம் சீனாவின் ஏலத்தொழில் துறையின் வளர்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், Ren Min பல்கலைக்கழகத்தின் செய்தியியல் துறையிலிருந்து பட்டம் பெற்ற பின், Liu Xin Hui செய்தியாளராக வேலை செய்யத் துவங்கினார். சிறு வயதிலிருந்தே கை எழுத்து மற்றும் ஓவியங்களில் பேரார்வம் கொண்டிருந்த அவருக்கு, எதேச்சையாக, Rong Bao Zhai என்னும் ஓவிய விற்பனை கடையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த நூறு ஆண்டுகளாக, அக்கடை சீனக் கை எழுத்து மற்றும் ஓவியங்களை விற்று வந்தது. அப்போது தான், சீனப் பெருநிலப்பகுதியில், பல்லாண்டு நிறுத்தப்பட்டிருந்த ஏலத்தொழில் துறை மீட்கப்படத் தொடங்கியது.

துவக்கத்தில், சீனாவில் ஏல நிறுவனங்களால் ஏலம் இடப்பட்ட பொருட்கள் மிக குறைவு. சீன ஏலத்தொழில் துறை சங்கத் தலைவர் Zhang Yan Hua அம்மையார் கூறியதாவது:

"கார்கள், மின்சாரப் பொருட்கள் உள்ளிட்ட சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், நீதி மன்ற விதிகளின் படி, பறிமுதல் செய்யப்பட்ட வீடுகள் மற்றும் கார்கள், அரசால் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் முதலியவை ஏலப் பொருட்களில் அடங்கும்" என்றார், அவர்.

இருந்த போதிலும், ஏலத்தொழில் துறை, சந்தை அமைப்பு முறையிலான ஒரு பகுதியாகும் என்றும், சந்தையில் ஏலத்தில் எடுக்கப்படக்கூடிய பல பொருட்கள் இருக்கின்றன என்றும் பலர் விரைவில் உணர்ந்து கொண்டனர். 1992ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்களில், ஷாங்காய் மாநகரில் நூற்றாண்டுகால வரலாறுடைய பழைய கடை Duo Yun Xuan, கலைப்பொருட்களின் ஏலத்துக்கான சீனப் பெருநிலப்பகுதியின் முதலாவது அனுமதி சான்றிதழை பெற்றது. இரண்டு திங்களுக்கு பின், Shen Zhen நகரின் எடுத்து செல்லக் கூடிய பொருட்களின் ஏலக்கடையில், நவீன சீன புகழ் பெற்றக் கலைஞர்களின் கை எழுத்து மற்றும் ஓவியங்களின் ஏலக்கூட்டம் முதல் முறையாக நடைபெற்றது. இவ்வாறு சீனாவில் கலைப் பொருட்களின் ஏலம் படிப்படியாக துவங்கியது. 6 திங்களுக்கு பின், ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற Duo Yun Xuan கை எழுத்து மற்றும் ஓவிய ஏலக்கூட்டம் முன்னென்றும் கண்டிராத அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

1 2