• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-24 19:11:04    
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui அ

cri

அப்போது, Liu Xin Hui வேலை செய்து வந்த Rong Bao Zhai, தமது ஏல நிறுவனத்தை நிறுவத் திட்டமிட்டது. ஜப்பானில் கல்வியை முடித்து, நாடு திரும்பியிருந்த Liu Xin Hui, Rong Bao Zhaiவின் ஏலம் இடுபவருக்கான வேட்பாளர்களில் ஒருவராக மாறினார். அவர் கூறியதாவது:

"சிறந்த கல்வி பெற்றவர், பெய்சிங்கை சேர்ந்தவர், தெளிவாக பேசுபவர் ஆகிய மேம்பாடுகள் எனக்கு உண்டு என்று பலர் கருதினர். அப்போது, அக்கடை அமைந்துள்ள Liu Li Chang சாலையில், மேலை நாட்டுப் பாணியாடையும் கழுத்து பட்டி அணிந்து, மிதிவண்டியில் கடைக்கு சென்றது நான் மட்டுமே. தோற்றத்தில், நான் ஏலம் இடுபவர் போலவே இருக்கின்றேன்." என்றார், அவர்.

1995ஆம் ஆண்டு, Rong Bao Zhai தனது ஏல நிறுவனத்தை நிறுவியது. Liu Xin Hui, தொழில் முறை ஏல இடுபவராக மாறினார். அத்துறையில் அதிக அனுபவங்களை தாம் பெறாமல் இருந்தால், Chang Cheng ஹோட்டலுக்குச் சென்று, சீன Jia De சர்வதேச பண்பாட்டு கலைப் பொருட்கள் ஏல நிறுவனத்தின் சிறந்த முறையில் ஏலம் இடுபவரான திரு Gao De Ming தலைமை தாங்கிய ஏலக்கூட்டத்தைப் பார்வையிட்டு, அவர் ஏலம் இடுவதை ஒளிப்பதிவு செய்து கொண்டார். வீடு திரும்பிய பின், தான் பதிவு செய்திருந்த ஒளிப்படத்தை பார்த்து அவர் பயிற்சி செய்தார்.


1 2