• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-30 10:23:55    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் உங்களது பங்கேற்பு சீன வானொலியின் வளர்ச்சிக்கு ஏதுவாக உள்ளது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை கேட்டு நீங்கள் அனுப்பிய கருத்து கடிதங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.
கலை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக, பொது அறிவு போட்டி பற்றி நினைவூட்டுகின்றோம். நவ சீனாவின் வைர விழா பொது அறிவுப் போட்டி தொடங்கிவிட்டது. உங்களது விடைகளை கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உடனடியாக அனுப்பி வையுங்கள்.
தமிழன்பன் சீன வானொலி நடத்துகின்ற பொது அறிவுப் போட்டியில் நேயர்களின் பங்கேற்பை காட்டுகின்ற அதேவேளையில், மதிப்பு மிக்க பரிசுகளை தட்டிச் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு. இனி நிகழ்ச்சியின் கடிப்பகுதிக்கு செல்வோம்.
கலை.....முதலில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட ஒலி பதிவிறக்கத்தின் கருத்துக்களை கேட்கலாம். அருமையான திபெத் எனும் இணையத் தள பொது அறிவு பாட்டில் சிறப்பு பரிசு பெற்ற நேயர் வளவனூர் புதுப் பாளையம் எஸ் செல்வம் அவரை பாராட்டும் வகையில் பாண்டிசேரி ஜி ராஜகோபால் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.


தமிழன்பன்,... அடுத்து ஒலிம்பிர் விளையாட்டுச் செய்திகளை கேட்டு விழுப்புரம் எஸ் பாண்டிய ராஜன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கலை......அடுத்து நீர் வளப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது பற்றி திருச்சி அண்ணா நகர் விடியார் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கலை முதலாவதாக, இலங்கை புதிய காத்தான் குடியிலிருந்து நுஷ்ரா அனுப்பிய கடிதம். கடந்த எட்டு ஆண்டுகளாக சீன வானொலியை கேட்டுவருகிறேன். நிகழ்ச்சிகளில் காலத்திற்குகேற்ற சிறப்பு தகவல்கள் பல இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம் சீன செய்திகள், சீனப்பண்பாடு, சீன மக்கள், சீன உணவு வகைகள் ஆகியயவை பற்றி, பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. சுவையான தகவல்களை வழங்கும் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சேவை தொடர்ந்து வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
தமிழன்பன் திருப்பூரில் புதிய நேயர் மன்ற உருவாக்கம் பற்றி அதன் தலைவர் ரெய்கி. செ. வேதமூர்த்தி எழுதிய கடிதம். திருப்பூரில் வள்ளுவர் சீன வானொலி நேயர் மன்றம் என்ற பெயரில் புதிய நேயர்மன்றம் உருவாக்கப்பட்டு பத்து பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ரெய்கி. செ. வேதமூர்த்தி தலைவராகவும், சே. சீனிவாசன் செயலராகவும், எ. அப்துல் ரகுமான் பொருளாளராகவும், இதர நான்கு செயற்குழு உறுப்பினர்களும் தோந்தெடுக்கப்பட்டுள்ளனர். 19 ஆம் நாள் நடைபெற்ற முதல் கூட்டத்தில் திங்களொரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், புதிய நேயர்களை அறிமுகப்படுத்தவும், நேயர்களை கருத்து கடிதங்கள் எழுத அறிவுறுத்தவும், நேயர்கள், நேயர் எண் பெற உதவி செய்யவும், திருப்பூர் மாவட்ட நேயர் மன்றத்தோடு இணைந்து கலந்தாய்வு நடத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


கலை அடுத்தாக, தேவனூர் ப. ஜோதி லட்சுமி சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். திபெத் இன புன்னகை அரசி சோமா பற்றியும் அவர் வழிகாட்டியாக பணிபுரியும் சுற்றுலாத்துறை பற்றியும் விளக்கி கூறப்பட்டது. திபெத் இன நடையுடை பாவனை, பழக்க வழக்கங்களை பொறுமையுடன் சுற்றுலாப் பயணியருக்கும் விளக்கும் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். மக்களை அதிகமாக ஈர்க்கும் தென் மேற்கு சீனாவில் உள்ள பனி நிறைந்த மலைகள் பற்றியும் இந்நிகழ்ச்சியில் அதிகமாக அறிய முடிந்தது.
தமிழன்பன் தொடர்வது, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி மதுரை திருமங்கலம் பி.கதிரேசன் எழுதிய கடிதம். பீசா பற்றிய கடந்தவார பாடத்தின் மீளாய்வையும், புதிய பாடத்தையும் சீன வானொலி ஒலிபரப்பில் கவனித்தேன். புதிய பாடத்தில் அதிக சொற்கள் இடம்பெற்றன. பல்வேறு வண்ணங்களில் ஆன உடைகளின் வகைகள் பற்றிய கேள்விகள், அவற்றின் அளவு, விலை எவ்வளவு, விலை அதிகமாக இருக்கிறதே, ஏதாவது தள்ளுபடி உண்டா ஆகியவற்றிற்கு சீன மொழி சொற்களை மனதில் பதியும்படி புரிய வைத்தது சிறப்பாக இருந்தது. இந்த தமிழ் மூலம் சீனம் உரையாடல் பகுதி அச்சடிக்கப்படுமானால் நலமாக இருக்கும்.
கலை மணச்ச நல்லூர் ந.சண்முகம் சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். திபெத்தின் லசா பகுதியில் பண்டைகால மருத்துவ நூல்கள், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள சிறப்பை சீன வானொலி மூலம் அறிய வந்தேன். மருத்துவ கலையிலுள்ள நான்கு வகை மருத்துவ சூற்றிறங்களை ஆய்வுகள் மூலம் அறிய பழமை வாய்ந்த வண்ண ஓவியங்களான இந்த மருத்துவ குறிப்புகள் உதவுகின்றன. ஒரு மீட்டர் நீளமுள்ள இந்த தாங்கா ஓவியங்கள் மருத்துவக்கலையை பாதுகாக்கும் பாரம்பரிய மருத்துவ நூல் என்பதை அறிந்து வியந்தேன்.

1 2