மின்னஞ்சல் பகுதி முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் சீன அரசுத்தலைவர் ஹூசிந்தாவ் ரஷியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் மேற்கொண்ட தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இணக்கமும், ஆற்றலும் செவ்வனே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலைநாடுகளின் ஆதிக்க சக்திகளுக்கு பதிலடி தரும்வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் ஆற்றலும் ஒற்றுமையும் அமைந்திருப்பது தனிச்சிறப்பானது. ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கு இதற்கு ஆக்கபூர்வமாக பங்காற்றியிருக்கும் என்று கருதுகிறேன். சீன அரசுத்தலைவரின் பயணம் மூலம் உறுப்பு நாடுகளின் உறவை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று உதவும் நேர்மறை செயல்பாடுகள் அமையும். மேலும், மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய BRIC நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் செய்தித் தொகுப்பில் சீன அரசு கொள்வனவு நடவடிக்கை என்னும் கட்டுரையைக் கேட்டேன். அதில் சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனையை உறுதி செய்ய சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கும், வர்த்தகப் பாதுகாப்புவாதத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாட்டிற்கும், அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை உறுதிபடுத்தி, அப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் கடமையுள்ளது. அந்த திசையிலேயே சீன அரசின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளது. சீனாவின் நடவடிக்கைகளில், எவ்வித வர்த்தக பாதுகாப்புவாதமும் காணப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன். சில மேலை நாடுகளின் பொய்ப்பிரச்சாரங்களை பற்றி கவலைப்படாமல், தனது கொள்கையி்ல் ஊன்றிநின்று நேர்மையான முறையில் தொடர்ந்து நடைபோட்டு பெரும் வெற்றி காண சீன அரசுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
"அருமையான திபெத்" என்ற இணையதள பொது அறிவுப் போட்டியில் தமிழ்பிரிவு நேயர் எஸ்.செல்வம் அவர்களுக்கு சிறப்பு பரிசு கிடைத்திருப்பதை கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியின் மூலமாக அறிந்தோம். அயராது உழைத்து தமிழ்பிரிவுக்கு சேவை செய்யும் எஸ்.செல்வம் அவர்களை மனமார பாரட்டுகின்றோம். அவருடைய சீனப்பயணம் வெற்றிபெற மீனாட்சிப்பாளையம் கா.அருண், சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி, சின்னவளையம் கு. மாரிமுத்து, பாண்டிச்சேரி என். பாலகுமார் ஆகியோர் வாழ்த்தி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி மருத்துவ உலகிற்கு இன்றளவும் கடும் சவலாக விளங்கி வரும் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாக விளங்கிவருவது புகையிலை பொருட்களாகும். சீன அரசு புகையிலை பொருட்கள் மீதான நுகர்வு வரியினை உயர்த்தியிருப்பதன் மூலமாக, வரும் காலங்களில் சீனமக்களிடையே புகையிலை நுகர்வுப்பழக்கம் படிப்பபடியாக குறைய ஒளிமயமான வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த நடவடிக்கை நோய் நொடியற்ற நலமான சீனாவை உருவாக்க வழி செய்யும். பாண்டிச்சேரி, என். பாலகுமார் இந்தியா இளைஞர் குழுவின் சீனப்யணம் என்னும் சிறப்பு நிகழ்ச்சியில், பாண்டிச்சேரியை சேர்ந்த மாணவி நிஷா பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்தேன். அவர் நாடு திரும்பிய பின், அவருடைய சீனப் பயண அனுபவங்களை கேட்டறிவேன். அவருடன் மேற்கொள்ளும் பேட்டியை ஒலிப்பதிவு செய்து மீண்டும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை வழங்க ஏற்பாடு செய்வேன். சீன வானொலி மூலமாக அவருடைய அறிமுகம் கிடைத்துள்ளதால், சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்கும் நேயராக அவரை உருவாக்குவேன். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பியதற்கு, அனைவருக்கும் எனது நன்றிகள். மீனாட்சிபாளையம், கா. அருண் நூறு பேரைக்கொண்ட இந்திய இளைஞர்கள் குழுவின் சீனப்பயணம் பற்றிய சிறப்பு நிகழ்சியில் தமிழ் இளைஞரின் கருத்துக்களை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது மகிழ்ச்சி தந்தது. இந்தியர் சீனவை பற்றி அறிய விரும்புவதை இந்நிகழ்ச்சி விவரித்தது. அதேபோல் சீனர்கள் எவ்வாறு இந்திய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விரும்புகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு இந்த சிறப்பு நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தீர்கள். பாராட்டுகள்
1 2
|