• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-03 09:22:50    
சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தில் ஈடுபடும் Qi Guo Hong அம்மையார்

cri
விதியின் படி, 2008ஆம் ஆண்டின் ஜூன் திங்கள் முதல் நாள் தொடக்கம், சீனாவில் பேரங்காடிகள், கடைகள் மற்றும் வர்த்தக சந்தைகளில், நெகிழி பைகளை இலவசமாக வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.
நெகிழி பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது மூலம், பயன்தரும் முறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்துக்களை, படிப்படியாக சீனர்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். Gan Su மாநிலத்தின் தலைநகரான Lan Zhouவில், Qi Guo Hong என்னும் பெண் விவசாயத் தொழிலாளி வாழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாக, நெகிழி பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி அவர் நகரவாசிகளுக்குப் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மட்டுமல்ல, சொந்த செலவில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத பைகளை வாங்கி, பொது இடங்களில் அவற்றை நகரவாசிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். பொது மக்கள் நெகிழி பைகளுக்குப் பதிலாக, இந்த வகை பைகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதே அவரது விருப்பம்.

2003ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், Lan Zhou நகரில் மணற்காற்று வீசியது. அந்த காற்றில் வீசி எறியப்பட்ட நெகிழி பைகளும் பறந்து வந்து எல்லா இடங்களிலும் காணப்பட்டன. நெகிழி பைகள் அளவுக்கு மீறி அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை Qi Guo Hong அம்மையார் அப்போது புரிந்து கொண்டார்.
இந்நிலைமையைக் கண்டு, Qi Guo Hong அம்மையார் கவலைப்பட்டார். முன்பு கோதுமை மாவுகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட துணி பைகளை வாங்கிய அவர் அவற்றைக் கழுவி, பொருட்கள் வாங்கும் பைகளைத் தைத்து, தயாரித்தார். அவ்வாறு தயாரிக்கப்பட்ட பைகளை கொண்டு, காய்கறி சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்குபவர் நெகிழி பைகளைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய வேளையில், அவர்களுக்கு தாம் தயாரித்த பைகளை வினியோகித்தார்.

பின்னர், அவர் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத பைகளை மொத்த விற்பனை சந்தையில் பெருமளவில் வாங்கி, நெகிழி பைகளுக்குப் பதிலாக அவ்வகை பைகளைப் பயன்படுத்துமாறு மக்களை வேண்டிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரசுரங்களை அச்சடித்து, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத பைகளை வாங்குவதற்கு சுமார் 30 ஆயிரம் யுவானை அவர் செல்விட்டிருக்கிறார்.
துவக்கத்தில், Qi Guo Hong அம்மையாரின் செயல்பாட்டை அவரது கணவர் புரிந்து கொள்ளவில்லை. Qi Guo Hong அம்மையாரின் ஊர், Gan Su மாநிலத்தின் Rong Jing மாவட்டத்தில் இருக்கிறது. அவர் திருமணம் செய்த பின், கண்வருடன் இணைந்து, Lan Zhou நகருக்கு சென்று வேலை செய்தார். இருவரின் ஒரு திங்கள் வருமானம் மொத்தமாக சுமார் 2 ஆயிரம் யுவான் ஆகும். அவர்களுடைய இரண்டு மகள்கள் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். 2 ஆயிரம் யுவான், இக்குடும்பத்தின் வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுவதாகும். Qi Guo Hong அம்மையார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டப் பின், வேலையை கைவிட்டார். அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, அவரது சொந்த செலவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். எனவே அவரது கணவர் அப்பணியை புரிந்து கொள்ளவில்லை.
1 2