• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-03 09:22:50    
சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தில் ஈடுபடும் Qi Guo Hong அம்மையார்

cri

சிறு வயதில் மிகவும் வறிய வாழ்க்கை நடத்தினேன் என்றும், தற்போதைய வாழ்க்கை பற்றி தாம் மிகவும் மனநிறைவு அடைவதாகவும் Qi Guo Hong அம்மையார் கூறினார். கையில் இருக்கும் பணத்தை கொண்டு, சமூகத்துக்கு பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும். செல்வந்தோர் இதில் மேலதிக பணம் நண்கொடையாக வழங்க வேண்டும். வறியவர்களும் தம்மால் இயன்ற அளவில் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடரும் அதே வேளையில், தமது குடும்ப பொறுப்பையும் ஏற்பது தனது முக்கிய கடமையென அவர் படிப்படியாக புரிந்து கொண்டார். எனவே செய்தித்தாள்களை அனுப்பும் பணியை அவர் தெரிவு செய்தார். இதனால் ஒருபுறம், வருமானம் பெற முடியும். மறுபுறம், செய்தித்தாள்களை அனுப்பும் வாய்ப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்ய முடியும் என்று அவர் கருதுகிறார்.
Qi Guo Hong சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தில் பேரார்வம் மிக்கவர் என்றும், அவரது செயல்பாடு, சமூகத்துக்கு பங்காற்றுவதாகும் என்றும் அவரது கணவர் படிப்படியாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது குடும்ப வேலைகளைச் செய்வதில் Qi Guo Hongக்கு அவர் உதவுவதுண்டு.

செய்தி ஊடகங்களின் மூலம், Qi Guo Hong அம்மையாரின் செயல்கள், சமூகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. Lan Zhou பல்கலைக்கழகத்தின் Lv Dui உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், Qi Guo Hong அம்மையாருடன் தொடர்புகொண்டு, அவருடன் கூட்டாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்பு கொண்டதன் மூலம், Qi Guo Hong அம்மையாருக்கு மேலதிக நபர்களை ஒருங்கிணைக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு பல்வேறு சமூகத் துறையினரை அணிதிரட்ட அவர் தீர்மானித்துள்ளார்.
நாள்தோறும் Qi Guo Hong அம்மையார் மிகவும் சுறுச்சுறுப்பாக இருகிறார். வருமானம் பெற்று, குடும்பச் சுமையை ஏற்க, அவர் கடினமான வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தில் அவர் உறுதியாக நிற்கின்றார். எங்கு சென்றாலும், பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பைகளை இலவசமாக வழங்கி, நெகிழி பைகளை குறைவாக பயன்படுத்துமாறு Qi Guo Hong அம்மையார் அவர்களை வலியுறுத்துகிறார்.
1 2