• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-06 20:29:58    
ஆடம் எந்திரன்

cri
புதியப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் சந்தையை நிரப்புகின்றன. இந்த பொருட்கள் ஒரு பயன்பாட்டிற்கு மட்டும் தேவைப்படலாம் அல்லது பன்முக பயன்பாட்டை நமக்கு அளிக்கலாம். இவ்வாறு தொடர்கின்ற புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வாழ்வை சீர்படுத்தி செழுமையாக்கி கொண்டிருக்கின்றன. இதுவரையில்லாத முற்றிலும் வேறுபட்ட புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறும் தோன்றாவிட்டாலும் அவற்றிற்கான ஆய்வு முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டவற்றில் புதிய வசதிகளை புகுத்தி மேம்படுத்தி உருவாக்கும் முயற்சிகளும் நாளும் தொடர்கின்றன. முதலில் மிக பெரிய அறையில் பல்வேறு தொகுதிகளாக செய்யப்பட்ட கணினி, இன்று நமது வீட்டு மேசையில் இயக்கப்படும் அளவிற்கு வந்துள்ளது கணினி துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளின் விளைவே.

அறிவியல் கண்டுபிடிப்புகள் வாழ்வின் எல்லா துறைகளிலும் காணப்படுகின்றன. கணினி கண்டுபிடிப்பு 50 பேர் செய்கின்ற வேலையை பதினைந்து பேருக்கும் குறைவானோரை கொண்டு விரைவாக செய்துவிட முடியும் என்பதை காட்டியுள்ளது. கட்டிடத்திற்கு அடித்தளம் தோண்டுவது குறைந்தது பத்து பேரின் சில நாட்கள் வேலையாக இருந்தது. அதனை குழிதோண்டும் இயந்திரத்தை கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடித்துவிடும் நிலை தோன்றிவிட்டது. இத்தகைய அறிவியல் வளர்ச்சிகள் எல்லாம் பணிகளை விரைவாக முடிக்கவும், குறைந்த நேரத்தில் அதிக பணிகள் செய்யவும் தூண்டுகிறது என்று சொன்னாலும் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வதையும் மறுக்க முடியாததாய் உள்ளது.

வேலைகளை செய்ய உற்பத்தி சாதனங்கள், இயந்திரங்கள் உள்ளன. அவற்றை இயக்க ஒரு நபர் தேவைப்பட்டார். ஆனால் இன்று அதுவும் வேண்டாம் என் றிலை உருவாகி வருகிறது. இப்போது இருக்கவே இருக்குது இயந்திர மனிதன். வீட்டு வேலைகளை செய்ய பாதுகாவலில் ஈடுபட என இயந்திர மனிதர்களை உருவாக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பின் வளர்ச்சிதான் தற்போது உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கோள்ளும் இயந்திர மனிதன். பிரிட்டனின் Wales சிலுள்ள Aberystwyth பல்கலைகழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ரோஸ் கிங் மற்றும் அவரது குழுவினர் இந்த அறிவியலாளர் இயந்திர மனிதனை அதாவது இயந்திர அறிவியலாளரை உருவாக்கியுள்ளனர். மனித உதவியின்றி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்த இயந்திர அறிவியல் அறிஞர் மேற்கொள்வது தான் இதன் சிறப்பு. இதுவரை கண்டுபிடிக்கப்ட்டுள்ள இயந்திர மனிதர்கள் ஏற்கெனவே அதற்கென வழங்கப்பட்டுள்ள குறிப்பு மற்றும் கட்டளைகளின் அடிப்படையில் இயங்கக்கூடியவை. ஆனால் ஆடம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்தி அறியலாளர் அப்படியல்ல. அதுவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயந்திர அறிவியலாளர் என்றால் மனிதனை போன்ற வடிவமைப்பு கொண்ட இயந்திர மனிதன் அல்ல இது. ஆடம் என்ற இந்த இயந்திர அறிவியலாளர் ஒரு சிறிய அறை முழுவதும் ஆய்வு கருவிகளோடு காணப்படுகிறது. அதில் காணப்படும் 4 தனிப்பட்ட கணினிகள் அதன் மூளையாக செயல்படுகிறது. இயந்திர கைகள், நிழற்பட கருவிகள், நீர்ம செயல்பாட்டு கருவிகள், தட்பவெப்பம் மற்றும் ஈரபதத்தை சீராக வைத்திருக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற கருவிகளை உள்ளடக்கியது தான் இந்த ஆடம் இயந்திர அறிவியலாளர். ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளிலும் இது சரியாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது. இனிப்பு கடையில் பயன்படுத்தப்படுகின்ற ஈஸ்ட் எனப்படுகின்ற நொதியின் மரபுத்தொகுதியை பற்றிய மேலதிக ஆய்வு செய்ய இந்த இயந்திர அறிவியலாளர் பய்னபடுத்தப்பட்டார். எந்த மரபணு எந்த நொதியத்தில் அடங்கியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க புதிய நொதி உயிரணுவின் சில கூறுகளை நீக்கிவிட்டு ஆய்வு செய்து அதன் வளர்ச்சியை கண்டுபிடித்தது. இந்த உயிரணு சரியாக வளரவில்லை என்றால் நீக்கப்பட்ட மரபணுவின் பண்பையையும் அந்த உயிரணுவின் வளர்ச்சியிலான முக்கியத்தவத்தையும் இந்திர அறிவியலாளர் கண்டுபிடித்தது. இவ்வாறு ஒரு நாளில் 1000 பரிசோதனைகளை இதனால் செய்ய முடியும். இதுவரை 13 நொதியத்தை பற்றி 20 அனுமானங்களை அது வெளியிட்டது. அதில் 12 அனுமானங்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இந்த நொதி உருவாக மிக முக்கிய காரணமாகும் மூன்று மரபணுக்களை இந்த இயந்திர அறிவியலாளர் இனம் கண்டுள்ளது. இதனை அறிவியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

1 2