
இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள ரோஸ் கிங் என்பவர் அறிவியலை மிகவும் மேம்மையடைய செய்வதே தமது இலக்கு என்று தெரிவிக்கின்றார். இயந்திரங்களுக்கு விடுமுறைகள் தேவையில்லை என்பதால் இப்போது நாம் மேற்கொள்ளும் ஆய்வுகளை விட பல மடங்கு அதிகமான வேலைகளை எளிதாக முடிந்துவிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாள்தோறும் வளர்ந்துவரும் இயந்திர மனிதவியல் தொழில்நுட்பம் அறிவியல் வளர்ச்சியின் உயர்வை சுட்டிக்காட்டுகின்றது.
ஒருவிதத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் மனிதகுலத்தின் வாழ்க்கையை வசதியாகவும் எளிமையானதாகவும் மாற்றி வருவது உண்மை என்றாலும், எல்லாவற்றிற்கும் இயந்திரங்களை சார்ந்து இருக்கக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அன்றாட வாழ்வின் சின்னசின்ன அம்சங்களைகளில் பொதிந்திருக்கும் இன்பங்களை நாம் இழந்துவிடுவோம். மனைவி கையில் மல்லிப்பூ போன்ற இட்லி சாப்பிட்டுவிட்ட காலம்போய் மனைவியே கணனியில் சொடுக்கினால் இட்லி தட்டுக்கு வரும் நிலைக்கு வளர்ந்து விட்டால் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பமே இயந்திர குடும்பமாகிவிடும்.
யார் கண்டார்? இன்னும் பத்தாண்டுகள் கழித்து பொது வினியோக அட்டை எனும் ரேசன் அட்டையை எடுத்து பார்த்தால் XY34, Adam 47 என்று பிள்ளைகளுக்கு அடுத்தாக வீட்டிலிருக்கும் இயந்திர மனிதர்களின் பெயரும் பட்டியலிடப்படலாம். 1 2
|