 2010ம் ஆண்டு உலக பொருட்காட்சி, ஷாங்காய் மாநகரில் நடைபெறும். 1851ம் ஆண்டு முதல் இதுவரை, உலகப்பொருட்காட்சி, சுமார் 30 நாடுகளில், 124 முறை நடைபெற்றுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, கலை, வாழ்க்கை முதலிய துறைகளில், இப்பொருட்காட்சி, கால ஓட்டத்தில், புதிய சுற்று போட்டி மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி வருகிறது. இதனால், உலகப் பொருட்காட்சி மீது, பலர் எதிர்பார்ப்பு கொண்டிருக்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காய் மாநகரில் கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருந்த உலகப் பொருட்காட்சி பூங்காவைச் சென்று பார்க்கின்றோம்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்கா, இம்மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதன் மொத்தப் பரப்பளவு, 5.28 சதுர கிலோமீட்டர். இதில், கண்காட்சி அகங்கள், உலகப் பொருட்காட்சி கிராமம், இதர அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் பரப்புரைப் பணியாளர் தியேள பிஃசுய் அம்மையார் கூறியதாவது:
கண்காட்சி அகங்கள், வேறுபட்ட செயற்திறன்களின் படி, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டன. "A" பகுதியில், ஆசிய நாடுகளின் கண்காட்சி அகங்கள் முக்கியமாக இருக்கின்றன. சீனக் கண்காட்சியகம், கலை நிகழ்ச்சி அரங்கம், உலகப் பொருட்காட்சி மையம் உள்ளிட்ட நிரந்தர கட்டிடங்களும், ஓஷியானிய நாடுகளின் கண்காட்சியகங்களும், "B" பகுதியில் இருக்கின்றன. "C" பகுதியில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகளின் கண்காட்சியகங்கள் அமைகின்றன. "D" பகுதி, தொழில் நிறுவனங்களின் கண்காட்சி பிரதேசமாகும். "E"யீ பகுதி, சிறந்த நகர நடைமுறை பிரதேசமாகும். உலகளவில் தேர்தெடுக்கப்பட்ட தலைசிறந்த நகரக் கட்டுமானத் திட்டங்கள், இப்பகுதியில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
1 2
|