
நகரத்தில் மேலும் அருமையாக வாழ்வது என்ற இப்பொருட்காட்சியின் தலைப்பை சீன மக்கள் புரிந்துகொண்டனர் என்பது, சீனக் கண்காட்சியகத்தில் எடுத்துக்காட்டப்படும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளர் சே ச்சிபாங் விளக்கினார்.
சீனாவின் கண்காட்சியகத்தில், சிறப்பு திரைப்படம் ஒன்றை காணும், அருமையான உணர்வை பயணிகள் அனுபவிக்கலாம் என்று தெரிகிறது. நகரமயமாக்கம் சீனாவுக்கு கொண்டு வந்த அறைகூவல்கள், சீனா இந்த அறைகூவல்களை எப்படி சமாளித்து வருகிறது ஆகியவை பற்றிய தகவல்கள், திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. நகரங்களின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சி மூலம், கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட சீனச் சீர்திருத்தத்தின் மாபெரும் சாதனைகளையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தும். தவிர, சீனக் கண்காட்சியகத்தின் கடைசி பகுதியில் எளிய ஒரு சதுக்கம் உள்ளது. அதில், பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் வணிக வசதிகள் இருக்கின்றன. எதிர்கால எண்ணங்களுடன், இங்கு பார்வையிட வரவேற்கின்றோம். 1 2
|