நண்பனை கைவிடாதே


தோழனை இக்கட்டான நேரத்தில் கைவிடாத டால்பின் ஆஸ்திரேலிய மக்களின் மனங்களை கவர்ந்திருக்கிறது. Brisbaneக்கு அருகிலுள்ள Moreton தீவு கடற்கரையில் நாள்தோறும் இரவு, 12 டால்பின்களுக்கு உணவு ஊட்டப்படுவதுண்டு. அதில் Nari என்ற டால்பின் திடீரென உணவுநேரத்தில் வராமல் இருந்தது. சுறாக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணியிருந்த நிபுணர்களுக்கு வியப்பூட்டும் விதமாக Nari ஆறு நாட்களுக்கு பின்னர் உணவு வழங்கப்படும் இடத்திற்கு வந்தது. அதனுடைய நண்பனான Echo என்ற டால்பின் தான் பல காயங்கள் பெற்றிருந்த Nari யை அழைத்து வந்தது. காயப்பட்ட Nari யுடன் சிலகாலம் தங்கியிருந்து, அது உணவு வழங்கப்படும் இடத்திற்கு நீந்திவருகின்ற அளவுக்கு தேறிய பின்னர் தான் Echo அதை அழைத்து வந்துள்ளது. துன்பவரும் நேரத்தில் துணைநிற்பவனே நல்ல நண்பன் என்பதை Echo வின் செயல் வெளிப்படுத்தியுள்ளது.
1 2
|