ஆங்கிலம் படிக்க ஒபாமா

அமெரிக்காவை சர்வதேச அளவில் தூக்கிநிறுத்தும் மாபெரும் ஆற்றலாக பார்க்கப்படுகின்ற புதிய அரசுத் தலைவர் பாராக் ஒபாமா தொடர்புடைய பொருட்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுவருகின்றன. பாராக் ஒபாமாவின் பேச்சுகளை தொகுத்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயன்படும் பாடபுத்தகமாக ஜப்பானில் வெளியிட்டுள்ளனர். 2 திங்களில் மட்டுமே இந்த புத்தகத்தின் நான்கு இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒபாமா வழங்கிய முக்கிய உரைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளதோடு, அவற்றின் ஜப்பான் மொழிபெயர்ப்பும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலம் கேட்டு பழகிக்கொள்ளும் விதமாக, ஒபாமாவின் பேச்சுகள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் இப்புத்தகத்தோடு வழங்கப்படுகிறது. 1,050 என் என்ற விலையில் கிடைக்கின்ற இந்த புத்தகம் ஆங்கில மொழியில் ஒபாமாவின் புலமைக்கும், சிறந்த பேச்சுத்திறனுக்கும் அங்கீகாராமாக உள்ளது. என் என்பது ஜப்பானின் நாணயமாகும்.
1 2
|