• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-13 18:47:44    
சீனப் பெருநிலப் பகுதி மற்றும் ஹாங்காங்கின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

இவ்வாண்டு மே திங்களின் துவக்கத்தில், இந்த ஆவணத்தோடு தொடர்புடைய 6வது உடன்படிக்கை, ஹாங்காங்கில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஆவணத்தின் கட்டுக்கோப்புக்குள், ஹாங்காங் சேவைத் துறை ஈடுபட்ட பெருநிலப்பகுதியுடன் தொடர்புடைய துறைகளின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. சுற்றுலா, வங்கி, பங்குபத்திரம், பொருட்காட்சி, சட்டம், போக்குவரத்து, புத்தாக்கம் முதலிய ஹாங்காங்கின் மேம்பாடு வாய்ந்த துறைகள், இதில் அடங்குகின்றன. தற்போதைய உலக நிதி நெருக்கடியின் பின்னணியில், இந்த நடவடிக்கைகள், ஹாங்காங் பொருளாதார வளர்ச்சியை வலிமையாக முன்னேற்றி வருகின்றன.

ஆசிய மற்றும் சீனாவின் புதிய வளர்ச்சி குறித்து மேலை நாட்டு பொருளியலாளரும், அமெரிக்க சிந்தனை கிடங்கு நிறுவனத்தின் பசிபிக் சர்வதேசக் கொள்கைச் சங்கத்தின் ஆய்வளருமான TOM plate மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார்.

ஹாங்காங்கின் கொள்கையின் சீரமைப்பு மட்டுமல்ல, பெருநிலப்பகுதியுடனான நெருங்கிய பொருளாதார வர்த்தக உறவு, ஹாங்காங், உலக நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு முக்கிய உதவி செய்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

1998ம் ஆண்டு, ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின், கொள்கை முதலியவற்றை ஹாங்காங் சரிப்படுத்தியுள்ளது. ஆகையால், தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் அனுபவங்களை ஹாங்காங் பெற்றுள்ளது. அத்துடன், பெருநிலப்பகுதியுடனான தொடர்பு, இதற்கு பெரிதும் உதவும். ஹாங்காங்கின் வீடு மற்றும் நிலச் சந்தை தொடர்ந்து மீண்டும் வளரத் துவங்கியது. ஹாங்காங்கின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் முக்கிய குறியீடாக இது விளங்குகின்றது என்று அவர் கூறினார்.

Fortis தொழில் நிறுவனம், ஐரோப்பாவின் மிகப் பெரிய நாணயச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஹாங்காங்கிலுள்ள நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலக நிதி நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், சீன நடுவண் அரசின் உதவியுடன், ஹாங்காங் பொருளாதாரம், எதிர்கால வாய்ப்பைக் கொள்கின்றது. இத்தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிய பிரதேச கிளையின் முதன்மை நிர்வாகத் தலைவர் செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி, அவர் கூறியதாவது:

சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங், உலக நிதி நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. சீனப் பொருளாதாரம் ஏற்கனவே சீராக இயங்கி வருகிறது. தற்போது, ஹாங்காங் பங்கு சந்தை நிதானமாகவும் விளங்குவது, இது காட்டுகின்றது.

1 2 3